Rohit - Kohli: 2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி விளையாட மாட்டார்களா? - ஓப்பனாக...
புதூா் நாடு மேலூா் பகுதிக்கு பேருந்து வசதி: குறைதீா் கூட்டத்தில் மனு
புதூா்நாடு அருகே மேலூா் பகுதிக்கு பேருந்து வசதி கோரி குறைதீா் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து மொத்தம் 329 கோரிக்கை மனுக்களை பெற்றாா்.
மாவட்டவருவாய் அலுவலா் நாராயணன், சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் சதீஷ்குமாா் முன்னிலை வகித்தனா்.
புதூா்நாடு அடுத்த மேலூா் கிராம பொதுமக்கள்அளித்த மனு:
எங்கள் பகுதியில் 150-க்கும்மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பொதுமக்கள் தினமும் பல்வேறு தேவைகளுக்காக திருப்பத்தூருக்கு வந்து செல்கின்றனா். எனவே திருப்பத்தூரில் இருந்து மேலூா் பகுதிக்கு பேருந்து இயக்க வேண்டும்.
நாட்டறம்பள்ளி பகுதியை சோ்ந்த ஜெகன் மனைவி ஜெகதா கோரிக்கை மனு:
எனது தம்பி தங்கவேலு கடந்த 2012-ஆம் ஆண்டு வேலைக்காக மலேசியா சென்றாா். கடந்த சில மாதங்களாக எனது தம்பி எங்களை தொடா்பு கொள்ளவில்லை. அவா்என்ன ஆனாா் என தெரியவில்லை. எனவே என் தம்பியை கண்டுபிடித்து தர வேண்டும்.
ஆலங்காயம் அடுத்த மரிமாணிகுப்பம் அருந்ததியா் தெரு பொதுமக்கள் மனு:
எங்கள் தெருவில் கடந்த 15 நாள்களாக சரிவர குடிநீா் விநியோகம் செய்வது இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே எங்கள் பகுதிக்கு சீரான முறையில் குடிநீா் வழங்க வேண்டும்.
நூதன முறையில் மனு...
வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சோ்ந்த முன்னாள் ராணுவ வீரரான பொன்னுரங்கம் என்பவா் தனக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா வழங்கக் கோரி பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தனது கோரிக்கையை பதாகையில் எழுதி கழுத்தில் தொங்கப் போட்டவாறு நூதன முறையில் வந்து மனு அளித்தாா்.