செய்திகள் :

புத்தாண்டு: ஆளுநர், துணை முதல்வர் வாழ்த்து!

post image

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”புத்தாண்டை முன்னிட்டு, அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்! 2025 ஆம் ஆண்டின் விடியல் புதிய ஆற்றல், வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தி, நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், வளத்தையும் கொண்டு வரட்டும்.

சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு நம்மை அர்ப்பணித்து நமது தேசத்தின் நிலையான, உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கு அதிக ஆர்வத்துடன் பங்களிப்பை வழங்குவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: மோடிக்காக அழைப்புப் பெற அமெரிக்கா சென்றாரா ஜெய்சங்கர்? சுவாமி கிண்டல்!

துணை முதல்வர் உதயநிதி தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், “பிறக்கின்ற 2025 புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் புத்தொளி வீசட்டும்! கடந்த ஆண்டுகளைப் போலவே, 2025-ஆம் ஆண்டிலும் முதல்வர் ஸ்டாலினின் அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அயராது பாடுபடும்.

2026-இல், 7-ஆவது முறையாக திமுக ஆட்சி அமைந்திட 2025-இன் ஒவ்வொரு நாளும் உழைத்திடுவோம். தொடங்கும் புத்தாண்டிலும் தமிழ்நாட்டில் பாசிச சிந்தனைகளுக்கு இடமளிக்காமல் - சமூக நீதி, மத நல்லிணக்கம், சமத்துவம் என முற்போக்குப் பாதையில் பயணிப்போம் என்கிற உறுதியோடு புத்தாண்டை வரவேற்போம். அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.

பொங்கல் விடுமுறை... ஆம்னி பேருந்து கட்டணத்தை கண்காணிக்க 30 குழுக்கள்!

சென்னை: பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி, அதிக கட்டணம் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்களை அமைத்து போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.இது குறித்து போக்குவரத்... மேலும் பார்க்க

திமுகவின் வெளிச்சத்தில் மாா்க்சிஸ்ட் இல்லை: பெ.சண்முகம்

விழுப்புரம்: திமுகவின் வெளிச்சத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருப்பதாக கூறுவது பொருத்தமானதல்ல என்று கட்சியின் புதிய மாநிலச் செயலா் பெ.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.விழுப்புரத்தில் நடைபெ... மேலும் பார்க்க

நலமாக இருக்கிறேன்... எம்.பி. சு.வெங்கடேசன்

விழுப்புரத்தில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்ற மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசனுக்கு ஞாயிற்றுக்கிழமை திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந... மேலும் பார்க்க

மார்க்சிஸ்ட் புதிய மாநில செயலாளர்! யார் இந்த பெ. சண்முகம்?

விழுப்புரத்தில் நடைபெற்று முடிந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாட்டில் அந்த கட்சியின் மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு அரசியல் கட்சி த... மேலும் பார்க்க

கோவை பத்திரிகையாளர் மன்றத்தின் காலண்டர் வெளியீட்டு விழா!

கோவை: கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான காலண்டர், டைரி வெளியீட்டு விழா மற்றும் பொங்கல் விழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.கோவை ஆவாரம்பாளையம் எஸ்என்ஆர் கல்லூரி வளாகத்தில் ந... மேலும் பார்க்க

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி. வாழ்த்து!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெ. சண்முகத்துக்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில் நடைபெற்று முடிந்த... மேலும் பார்க்க