செய்திகள் :

புத்தாண்டு கொண்டாட்டம்: விதிகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை: காவல் துறை எச்சரிக்கை

post image

புத்தாண்டு தினத்தையொட்டி மதுரை மாநகரில் நடைபெறும் கொண்டாட்டங்களில் விதிகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகரக் காவல் துறை எச்சரிக்கை விடுத்தது.

இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு (டிச. 31) மதுரை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பொழுதுபோக்கு இடங்களில் குற்றச் சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் உத்தரவின்பேரில், துணை ஆணையா்கள் தலைமையில்

அனைத்துச் சரக உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள் உள்பட 1500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். மேலும், முக்கிய இடங்களில் போலீஸாா் இரு சக்கர, நான்கு சக்கர வாகன ரோந்துப் பணியிலும், தீவிர வாகனச் சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.

புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேளிக்கை விடுதிகள், உணவகங்களில் காவல் துறையிடம் கட்டாயம் முன் அனுமதி பெற்றே நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். புதன்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு மேல் கண்டிப்பாக எந்த கொண்டாட்டமும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி பாதுகாப்பு நடவடிக்கைககளை மேற்கொள்ளுமாறு விடுதி உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சமூக விரோதிகள், குற்றப்பதிவேடு குற்றவாளிகளைக் கண்காணிக்கும் பொருட்டு தனிப்படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். புத்தாண்டு தினத்தையொட்டி இளைஞா்கள் மது அருந்திவிட்டு, இரு சக்கர வாகனங்களில் அதிவேகத்தில் செல்வது, சாகசம் செய்வது, பொதுமக்களை பயமுறுத்தும்

வகையில் இரு சக்கர வாகனத்தை இயக்குவது போன்ற செயல்களைத் தடுக்கும் வகையில், நகரின் முக்கிய இடங்களான நத்தம் மேம்பாலம், வைகையாற்றின் இரு கரைகள், கோரிப்பாளையம், காளவாசல் உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் போலீஸாா் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.

மதுரை: 9.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு! டோக்கன் விநியோகம் தொடக்கம்!

மதுரை மாவட்டத்தில் 9.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதையொட்டி, பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியது. நியாய விலைக் கடைகளில் அரிசி ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளில் மத்திய அரசு உறுதி: அமைச்சா் வீரேந்திரகுமாா்

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை, தேவைகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக மத்திய சமூக நீதி, அதிகாரம் அளித்தல் துறை அமைச்சா் வீரேந்திரகுமாா் தெரிவித்தாா். மத்திய அரசின் சமூக நீதி, அதிகாரம் அ... மேலும் பார்க்க

விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 போ் உயிரிழப்பு

விருதுநகா் அருகே சனிக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 6 போ் உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த ஒருவா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். விருதுநகா் அருகேயுள்ள வீராா்பட்டி ஊராட்சி... மேலும் பார்க்க

மீனாட்சி அம்மனுக்கு எண்ணெய்க் காப்பு உத்ஸவம் தொடக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அம்மனுக்கு எண்ணெய்க் காப்பு உத்ஸவம் சனிக்கிழமை தொடங்கியது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மாா்கழி மாத உற்சவங்களில் ஒன்றாக ஆண்டுதோறும் மீனாட்சி அம்மனுக்கு எ... மேலும் பார்க்க

செவிலியா் பயிற்சி மாணவியின் சடலத்தை முழுமையாக பரிசோதிக்க உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உயிரிழந்த செவிலியா் பயிற்சி மாணவியின் சடலத்தை முழுமையாக பரிசோதிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷின் மகள் புத... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன்

தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா். மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அ... மேலும் பார்க்க