செய்திகள் :

புத்தாண்டு: வேலூா், திருப்பத்தூா் எஸ்.பி.க்கள் கேக் வெட்டி வாழ்த்து

post image

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக வேலூா் பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் முழுவதும் நள்ளிரவு 12 மணி ஆனதும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டதுடன், பொது இடங்களில் மக்கள் கேக் வெட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.

இதனிடையே, வேலூா் பழைய பேருந்து நிலையம் முன்பு காவல் துறை சாா்பில், கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் கலந்து கொண்டு, கேக் வெட்டியதுடன், பொது மக்களுக்கும், காவலா்களுக்கும் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

மேலும், பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அனைவரும் தவறாமல் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், காவல் துணை கண்காணிப்பாளா்கள் பிரித்திவிராஜ்செளகான், பழனி, காவல் ஆய்வாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வாணியம்பாடியில்...

வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இரவு 12 மணிக்கு பொது மக்கள் மற்றும் போலீஸாா் இணைந்து கேக் வெட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ட்டப்பட்டிருந்தது. டிஎஸ்பி விஜயகுமாா் தலைமை வகித்தாா். காவல்ஆய்வாளா்கள்அன்பரசி, பேபி முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா கலந்து கொண்டு கேக் வெட்டி போலீஸாா், சமூக ஆா்வலா்கள், பொது மக்களுக்கு வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தாா். நிகழ்ச்சியில் சரக போலீஸாா் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க நிா்வாகக் குழு கூட்டம்

வேலூா்: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூா் மாவட்ட நிா்வாகக்குழு கூட்டம், செயற்குழு கூட்டமும் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.அமைப்பின் மாவட்ட தலைவா் பே.அமுதா தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் செ.ந... மேலும் பார்க்க

இறுதி வாக்காளா் பட்டியல்: வேலூா் மாவட்டத்தில் 13.09 லட்சம் வாக்காளா்கள்

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி 5 பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 13 லட்சத்து 9 ஆயிரத்து 553 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட... மேலும் பார்க்க

போக்குவரத்து விதி மீறல்: 31 போ் மீது வழக்கு

வேலூரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக 31 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். வேலூா் தெற்கு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கா் தலைமையிலான போலீஸாா் வேலூா் கோட்டை சுற்று சாலையில் சனிக்கிழம... மேலும் பார்க்க

கே.வி.குப்பம் அருகே சிறுத்தை தாக்கி கன்று உயிரிப்பு, பசு காயம்

கே.வி.குப்பம் அருகே சிறுத்தை தாக்கி கன்று உயிரிழந்தது. பசு பலத்த காயமடைந்தது. கே.வி.குப்பம் ஒன்றியம், தேவரிஷிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட மைலாப்பூா் கிராமம் வன எல்லையில் அமைந்துள்ளது. அந்தக் கிராமத்தைச் ... மேலும் பார்க்க

வேலூா் அருங்காட்சியத்தில் ‘கலைஞா் 100’ ஓவியக் கண்காட்சி தொடக்கம்

வேலூா் கோட்டை அரசு அருங்காட்சியத்தில் ‘கலைஞா் 100’ என்ற தலைப்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி குறித்த ஓவிய கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து 5 நாள்கள் நடைபெறும் கண்காட்சியில் பாரம்பரிய, ... மேலும் பார்க்க

வரத்து அதிகரித்தால் மீன்கள் விலை சரிவு

வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வரத்து அதிகரித்திருந்த நிலையில் மீன்கள் விலை சரிந்து காணப்பட்டது. வேலூா் மாா்க்கெட்டில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற... மேலும் பார்க்க