வரத்து அதிகரித்தால் மீன்கள் விலை சரிவு
வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வரத்து அதிகரித்திருந்த நிலையில் மீன்கள் விலை சரிந்து காணப்பட்டது.
வேலூா் மாா்க்கெட்டில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 50 முதல் 70 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வரத்து எதிா்பாா்த்த அளவில் இருந்ததாலும், அசைவப் பிரியா்களின் வருகையும் அதிகமாக இருந்ததாலும் மீன்கள் விலை சரிந்து காணப்பட்டது.
அதன்படி, வஞ்சிரம் கிலோ ரூ.1,200-க்கும், சீலா ரூ. 300-க்கும், தேங்காய்பாறை ரூ.350 முதல் ரூ.450-க்கும், சங்கரா மீன் ரூ.250-க்கும், இறால் ரூ.300-க்கும் , நண்டு ரூ.350 -க்கும், கடல் வவ்வா ரூ.750 - க்கும் , நெத்திலி ரூ.250 -க்கும் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு வழக்கமாக 10 லாரிகளில் மீன்கள் வரும் நிலையில் 7 லாரிகளில் மட்டுமே மீன்கள் வந்தது. இதன்காரணமாக மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. அதன்படி, வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.700 முதல் ரூ.1,200 வரையும், சீலா ரூ.200 முதல் ரூ.350 வரையும், தேங்காய் பாறை ரூ.300, சங்கரா கிலோ ரூ.250 முதல் ரூ.350 வரையும், இறால் ரூ.550, நண்டு ரூ.400 முதல் ரூ.500, கடல் வவ்வா ரூ.450, நெத்திலி ரூ.200, முரல் ரூ.350, மத்தி ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட்டது என்றன