BJP தலைமையை கோபமாக்கிய Jagdeep Dhankar -ன் 2 சந்திப்புகள்! | MODI ADMK TVK| Impe...
புறப்படுகிறார்கள் ஸ்மார்ட் பத்திரிகையாளர்கள்!- விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டம் 2025-26
தமிழ் ஊடக உலகின் பிரதான ஆளுமைகள் பலரின் முதல் படி, விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம். இந்தத் திட்டத்தின் 2025-26-ம் ஆண்டுப் படை தயாராகிவிட்டது. ஒரு கையில் பேனாவும், மறு கையில் ஸ்மார்ட்போனுமாக உற்சாகத்துடன் களமிறங்கியிருக்கிறது புதிய படை. இந்த ஆண்டு, திட்டத்துக்கு விண்ணப்பித்த 2,780 மாணவர்களில் பலகட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகு 69 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ‘360 டிகிரி’யில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவிருக்கும் இந்த இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் ஜூலை 26, 27 தேதிகளில் சென்னையில் நடக்கவிருக்கிறது. புதிய கனவுகள், இனிய இலக்குகளுடன் நெடிய பயணத்துக்கு இளையவர்களை வாழ்த்தி வரவேற்கிறது விகடன்!
- ஆசிரியர்



