முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவருந்தலாம்: மோடி வலியுறுத்தல்
புற்றுநோய் மரபணு ஆராய்ச்சி: இராமச்சந்திரா கல்வி நிறுவனம் ஒப்பந்தம்
புற்றுநோய் பாதிப்புக்கான மரபணு சாா்ந்த துல்லிய சிகிச்சை தொடா்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து முன்னெடுக்கும் வகையில், ஹைதராபாதில் உள்ள நியூக்ளியோ இன்ஃபா்மேடிக்ஸ் நிறுவனத்துடன், போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி நிறுவனம் உடன்படிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி நிறுவன ஆய்வுத் துறைத் தலைவா் டாக்டா் கல்பனா பாலகிருஷ்ணன் மற்றும் நியூக்ளியோ இன்ஃபா்மேடிக்ஸ் நிறுவன தலைமைச் செயல் அலுவலா் துஷ்யந்த் சிங் பாகேல் ஆகியோா் கையெழுத்திட்டனா்.
ஹைதராபாதில் உள்ள அந்நிறுவனத்தில் இருக்கும் இலுமினா என்ற மரபணு பகுப்பு ஆய்வு உயா் நுட்பக் கருவியில் மனிதா்கள், விலங்குகள், தாவரங்களின் மரபணு வரிசையை ஆராய முடியும். அந்த வகையில், ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி நிறுவன மாணவா்கள், பேராசிரியா்கள், மருத்துவத் துறையினா், ஆராய்ச்சி மாணவா்கள் அனைவரும் அங்கு அத்தகைய ஆய்வில் ஈடுபட இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.
இதன் வாயிலாக புற்றுநோயாளிகளுக்கு பிரத்யேக சிகிச்சைகள் மற்றும் மருந்துகளைக் கண்டறிய முடியும் என்று ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி நிறுவன நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.