செய்திகள் :

புல்டோசர் நடவடிக்கை: 2 மாதங்களில் இடிக்கப்பட்ட 130-ல் பெரும்பாலும் இஸ்லாமியர் கட்டடங்களே!

post image

பாஜக ஆளும் மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் குற்றம் சாட்டப்பவர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் கட்டடங்களை புல்டோசரை வைத்து இடித்து தரைமட்டமாக்கப்படுவது, தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. இருப்பினும், புல்டோசர் நடவடிக்கைகள் குறைந்தபாடில்லை.

உத்தரப் பிரதேசத்தில்தான் அதிகளவில் புல்டோசர் நடவடிக்கைகள் நடப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான நடவடிக்கை என்றுகூறி, கடந்த 2 மாதங்களில் 130 அங்கீகரிக்கப்படாத கட்டடங்களை அம்மாநில அரசு இடித்ததுடன், 190-க்கு சீல் வைத்துள்ளது.

அதுமட்டுமின்றி, அவற்றில் பெரும்பாலும் இஸ்லாமியர்களின் கட்டடங்களாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அரசு மற்றும் தனியார் நிலங்களில் கட்டப்பட்ட இஸ்லாமியர்களின் கல்விச் சாலை, தொழுகைத் திடல், தர்கா மீது புல்டோசர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது ஒருசாரார் மீதான பாகுபாடு நடவடிக்கை என்ற சந்தேகத்தை எழுப்புவதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.

டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்: ராகுல் காந்தி

டிஜிட்டர் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.கடந்த மக்களவைத் தோ்தலில் தோ்தல் ... மேலும் பார்க்க

தில்லியில் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாளை(ஆக.11) பேரணி

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், நாளை (ஆகஸ்ட் 11) தில்லியில் பேரணி நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி ஒர... மேலும் பார்க்க

அமேதியில் குடும்பத் தகராறில் கணவரின் பிறப்புறுப்பை வெட்டிய மனைவி!

அமேதியில் குடும்பத் தகராறில் கணவரின் பிறப்புறுப்பை மனைவி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், ஜக்தீஷ்பூர் பகுதியில் ஃபசன்கஞ்ச் கச்னாவ் கிராமத்தில் வசிப்பவர் அன்சார் அகமத... மேலும் பார்க்க

பெங்களூரில் 3 வந்தே பாரத் ரயில், மஞ்சள் தடத்தில் மெட்ரோ சேவை: பிரதமர் தொடக்கி வைத்தார்!

பெங்களூரில் 3 வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெங்களூர் - பெலகாவி, அமி... மேலும் பார்க்க

உ.பி.: கணவருடனான பிரச்னையால் 3 குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த மனைவி

உ.பி.யில் கணவருடனான பிரச்னையால் தனது 3 குழந்தைகளையும் உடலில் சேர்த்து கட்டிக்கொண்டு கால்வாயில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், பண்டா மா... மேலும் பார்க்க

வாரணாசியில் கோயில் கருவறையில் தீ விபத்து: 7 பேர் காயம்

வாரணாசியில் கோயில் கருவறையில் ஏற்பட்ட தீ விபத்தில் தலைமை அர்ச்சகர் உள்பட 7 பேர் காயமடைந்தனர். ஆண்டுதோறும் சவான் மாத பௌர்ணமி நாளில், வாரணாசியில் உள்ள ஆத்ம விஸ்வேஷ்வர் மகாதேவ் கோயிலில் சிறப்பாக அலங்கரிக... மேலும் பார்க்க