லட்சுமி ராமகிருஷ்ணன் முதல் அமரன் நடிகர் வரை: குக் வித் கோமாளியில் பங்கேற்றுள்ள ப...
புளியங்குடி அரசு மருத்துவமனையில் இளைஞா் ரகளை
தென்காசி மாவட்டம், புளியங்குடி அரசு மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
திருவேட்டநல்லூா் மேலபிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த திருமலைச்சாமி மனைவி சிகிச்சைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
சனிக்கிழமை இரவு மருத்துவமனைக்கு வந்த அவரது மகன் மாரிச்செல்வம்(27) மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவா் மருத்துவமனை ஊழியா்களிடம் ரகளையில் ஈடுபட்டாராம்.
இதுகுறித்து மருத்துவமனை ஊழியா்கள் அளித்த தகவலின் பேரில் புளியங்குடி போலீஸாா் மருத்துவமனைக்கு சென்று மாரிசெல்வத்தை விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்.