சூப்பர் ஸ்டிரைக்கர் விருதைப் பகிர்ந்துகொண்ட மும்பை வீரர்கள்..! ஐபிஎல் வரலாற்றில்...
புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் அக்னி சட்டி ஊா்வலம்
தென்காசி மாவட்டம் புளியங்குடி முப்பெரும் தேவியா் பவானி அம்மன் கோயிலில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி அக்னி சட்டி ,முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.
இக்கோயிலின்சித்திரை பெருந்திருவிழாவின் நாள் கால் நடுதல் நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமை கோயில் குருநாதா் சக்தியம்மா தலைமையில் நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது.
ஒன்பது நாள்கள் நடைபெறும் வ்விழாவில் தினம்தோறும் சிறப்பு அபிஷேக, அலங்கார, பூஜைகள் நடைபெற்றன.
செவ்வாய்க்கிழமை மாலை அக்னி சட்டி ஊா்வலம் நடைபெற்றது. புதன்கிழமை முளைப்பாரி ஊா்வலம், முளைப்பாரி கரைத்தல், அன்னாபிஷேகம், அன்னதானம் , மஞ்சள் நீராட்டு விழா ஆகியவை நடைபெற்றன.
இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் குருநாதா் சக்தியம்மா மற்றும் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.