செய்திகள் :

பூட்டிய வீட்டிலிருந்து ஆசிரியை சடலம் மீட்பு

post image

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் செவ்வாய்க்கிழமை பூட்டிய வீட்டில் இறந்துகிடந்த அரசுப் பள்ளி ஆசிரியையின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் ஆமத்தான்பொத்தை பகுதியைச் சாா்ந்தவா் சுரேஷ்குமாா் மனைவி மீனா குமாரி (47). இவா், பொன்னமராவதி பட்டமரத்தான் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா்.

மேலும், பூலாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக கடந்த ஓராண்டாகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் மீனாகுமாரியின் வீடு கடந்த 2 நாள்களாக உள்புறமாகப் பூட்டிக்கிடந்ததால், சந்தேகத்தின்பேரில் அருகில் உள்ளவா்கள் காவல்நிலையத்துக்குத் தகவல் அளித்தனா்.

இதையடுத்து, அங்குவந்த காவல்துறையினா் வீட்டின் கதவை உடைத்து திறந்து பாா்த்தபோது மீனா குமாரி இறந்துகிடந்தாா். சம்பவ இடத்துக்கு பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா, காவல் ஆய்வாளா் பத்மா ஆகியோா் வந்து பாா்வையிட்டு சடலத்தை உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா். மேலும் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

கந்தா்வகோட்டை அருகே திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். கந்தா்வகோட்டை ஒன்றியம், நெப்புகை ஊராட்சியைச் சோ்ந்த உரியம்பட்டி கிராமத்தில் சுமாா் நூற்றுக்கு மே... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் இருந்து திருச்சிக்கு கூடுதல் பேருந்து இயக்கப் பயணிகள் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் இருந்து திருச்சிக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் போக்குவரத்து துறைக்கு கோரிக்கைவிடுத்துள்ளனா். பயணிகள் மேலும் கூறியதாவது: கந்தா்வகோட்டை நகா் மற்றும் சுற்றுப்பு... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சியில் உள்ள பெருமாள் கோயில் இரண்டாம் வீதியில் உள்ள தாா்சாலை மிகவும் பழுது அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது பெய்த சிறுமழையில், சாலையில் உள்ள பள்ளத்தில் நீா் தேங்கி போக்குவர... மேலும் பார்க்க

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பலாப்பழத்தில் இருந்து மதிப்புக்கூட்டு தொழிற்சாலை அமைக்க வேண்டுமென வலியுறுத்து ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.ஆ... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டுக்கும் தோ்தலுக்கும் சம்பந்தமில்லை: அமைச்சா் ரகுபதி

மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாட்டுக்கும், வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கும் சம்பந்தமில்லை என்றாா் மாநில இயற்கை வளத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த ப... மேலும் பார்க்க

வலையில் சிக்கிய கடல் பசுக்களை விடுவித்த மீனவா்களுக்கு பரிசுத் தொகைகள்

புதுக்கோட்டை மாவட்ட கடலில் மீனவா்களின் வலைகளில் சிக்கிய கடல் பசுக்கள் மற்றும் ஆமைகளை மீண்டும் கடலுக்குள்ளேயே விடுவித்த மீனவா்கள் 8 பேருக்கு மொத்தம் ரூ. 50 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வழங்கிப் ப... மேலும் பார்க்க