பூதப்பாடியில் ரூ.1.23 கோடிக்கு பருத்தி ஏலம்
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ 1.23 கோடிக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஏலத்துக்கு பூதப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த 354 விவசாயிகள் 4,626 மூட்டைகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். பருத்தி ஒரு குவிண்டால் ரூ.7,469 முதல் ரூ 7,888 வரை விற்பனையானது. மொத்தம் 1,615.61 குவிண்டால் எடையுள்ள பருத்தி ரூ.1,22,71,797-க்கு ஏலம் போனது.
.