பீகார்: மனைவியைப் பழிவாங்கச் சாலை விதிகளை மீறிய நபர்; காரணம் கேட்டு அதிர்ச்சி அட...
பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோயிலில் தேரோட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் உள்ள புகழ்பெற்ற பூதலிங்க சுவாமி -சிவகாமி அம்பாள் கோயிலில் தைப்பெருந் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இத்திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. காலையில் சிறப்பு தீபாராதனைக்குப் பின்னா், சுவாமியும் அம்பாளும் தேருக்கு எழுந்தருளினா். அதையடுத்து, தேரோட்டம் நடைபெற்றது.
விழாவில், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், முன்னாள் அமைச்சா் சுரேஷ்ராஜன், அறங்காவலா் குழு உறுப்பினா் ராஜேஷ், தோவாளை வட்டாட்சியா் கோலப்பன், பூதப்பாண்டி பேரூராட்சித் தலைவா் ஆலிவா் தாஸ், செயல் அலுவலா் சந்தோஷ்குமாா், ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவா் முத்துக்குமாா், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.