செய்திகள் :

பெங்களூரு கூட்ட நெரிசல்: ஆர்சிபியிடம் விளக்கம் கேட்டு பிசிசிஐ ஒழுங்காணையம் நோட்டீஸ்!

post image

ஐபிஎல் 2025 கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு பிசிசிஐ ஒழுங்காணையம், நெறிமுறை அதிகாரி கூட்டநெரிசலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டம் ஜூன் 4ஆம் தேதி பெங்களூரில் நடைபெற்றது.

அந்தக் கொண்டாட்டத்தில் சின்னசாமி கிரிக்கெட் திடலுக்கு முன்பாக ஏற்பட்ட கூட்டநெரிசலில் 11 போ் உயிரிழந்தனா்.

ஐபிஎஸ் அதிகாரி விகாஸ் குமார் அளித்த புகாரின் பேரில் இது குறித்து, பிசிசிஐ ஒழுங்காணையம், நெறிமுறை அதிகாரி அருண் மிஸ்ரா ஆர்சிபி அணி, கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கும் விளக்கம் கேட்டு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

அந்தச் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கூட்ட நெரிசலின் தன்மையைக் கருத்தில்கொண்டு, புகாருக்குப் பதிலளிக்க சம்பந்தப்பட்ட ஆர்சிபி அணி, கர்நாடக கிரிக்கெட் சங்கமும் தங்களது விளக்கத்தை எழுத்துபூர்வமாக சமர்பிக்க வேண்டும்.

இந்தப் புகார் ஜூன் 4ஆம் தேதி சின்னசாமி திடலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பலி குறித்து பதியப்பட்டுள்ளது. அதில் ஆர்சிபி அணியின் நிர்வாகம் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

புகார் தெரிவித்தவர் தவறுகளுக்குப் பொறுப்பேற்கும்படி தெரிவித்துள்ளார். மேலும், ஆர்சிபி அணியை தடைசெய்யவும் விற்பனை பேச்சுவார்த்தைகளை செல்லாததாக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் புகாரில் ஆர்சிபி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஐபிஎஸ் அதிகாரி விகாஷ்குமார் மீதான பணியிடை நீக்கத்தை தடைசெய்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.

IPL champions Royal Challengers Bengaluru have landed in further trouble after BCCI Ombudsman-cum-Ethics Officer Justice (Retd) Arun Mishra directed the franchise, along with the Karnataka State Cricket Association (KSCA), to file written submissions over gross negligence during the team's victory celebrations in Bengaluru, which led to the death of 11 people.

டிஎன்பிஎல்: எலிமினேட்டரில் திண்டுக்கல் டிராகன்ஸ் வெல்ல 141 ரன்கள் இலக்கு!

டிஎன்பிஎல் எலிமினேட்டர் போட்டியில் திண்டுக்கல் அணி வெற்றிபெற 141 ரன்களை இலக்காக திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி நிர்ணயித்துள்ளது. திண்டுக்கல்லில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் ... மேலும் பார்க்க

மதிய உணவு இடைவேளை: இந்திய அணி அதிரடி, ஜெய்ஸ்வால் அரைசதம்!

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 98 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்ச... மேலும் பார்க்க

டி20 போட்டிகளில் புதிய சாதனை படைக்கவிருக்கும் இந்திய மகளிரணி கேப்டன்!

இந்திய மகளிரணி டி20 கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் டி20 போட்டிகளில் புதிய சாதனையை நிகழ்த்தவிருக்கிறார். இந்திய மகளிரணி இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்து 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையா... மேலும் பார்க்க

2-ஆவது டெஸ்ட்: இந்தியா பேட்டிங், பும்ரா அணியில் இல்லை!

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்திய அணியில் பும்ரா இல்லை என்பது ரசிகர்கள் மத்த... மேலும் பார்க்க

மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம்! - முகமது ஷமிக்கு கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜஹானுக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேக... மேலும் பார்க்க

2-வது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவிக்காத இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இந்திய அணி இன்னும் அறிவிக்கவில்லை.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 2) முதல் தொடங்கு... மேலும் பார்க்க