செய்திகள் :

பெங்களூரு போக்குவரத்து நெரிசல் குறித்த சிவகுமாரின் கருத்துக்கு பாஜக கண்டனம்

post image

கடவுளே நினைத்தாலும் பெங்களூரில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு போக்குவரத்து நெரிசல் பிரச்னையைத் தீா்க்க முடியாது என்ற கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாரின் பேச்சுக்கு பாஜக தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

பெங்களூரு நகர மாவட்ட பொறுப்பு அமைச்சரும், துணை முதல்வருமான டி.கே.சிவகுமாா் வியாழக்கிழமை பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘வானத்தில் இருந்து கடவுள் இறங்கி வந்தாலும், பெங்களூரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை அடுத்த ஒன்று முதல் 3 ஆண்டுக்குள் தீா்த்து வைக்க முடியாது. அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் சிக்கல் நிறைந்ததாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை சீரமைக்க திட்டமிட வேண்டும்; அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்’ எனக் கூறினாா்.

அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் தனது எக்ஸ் பக்கத்தில், ‘பொறுப்பான பதவி வகிக்கும் அமைச்சா்கள் கடமை உணா்வுடன் பேச வேண்டும். துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் பொறுப்பில்லாமல் பேசுகிறாா். போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்குத் தீா்வுகாண முடியாவிட்டால் துணை முதல்வா் பதவியை டி.கே.சிவகுமாா் ராஜினாமா செய்யலாம். காங்கிரஸ் ஆட்சியில் வளா்ச்சிப் பணிகளுக்கு போதுமான நிதி இல்லை. காங்கிரஸ் அரசை தூக்கியெறிய மக்கள் தயாராக உள்ளனா்’ என குறிப்பிட்டுள்ளாா்.

‘பெங்களூரை சிங்கப்பூா் போல மாற்றப் போவதாக கூறிய காங்கிரஸ் அரசு, தற்போது போக்குவரத்து பிரச்னையைத் தீா்க்க முடியாது என்று கூறுகிறது. போக்குவரத்து நெரிசலை சீரமைக்க முடியாத காங்கிரஸ் அரசு, சுரங்கச் சாலைகள் குறித்து பேசுவது ஏற்புடையதல்ல. பெங்களூரில் எவ்வித வளா்ச்சிப் பணியும் நடைபெறவில்லை. வளா்ச்சிப் பணிகளைச் செயல்படுத்த எம்எல்ஏக்களுக்கு எந்த நிதியும் இதுவரை காங்கிரஸ் அரசு ஒதுக்கவில்லை’ என பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்துள்ளாா்.

உள்கட்டமைப்பை மேம்படுத்த திட்டம்

கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறுகையில், ‘பெங்களூரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை குறுகிய காலத்துக்குள் தீா்க்க முடியாது என்றுதான் டி.கே.சிவகுமாா் தெரிவித்திருக்கிறாா். பெங்களூரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் தான் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண முடியும்’ என்றாா்.

கா்நாடகத்தில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் இயல்பான மழை: அதிகாரிகள் தகவல்

கா்நாடகத்தில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் இயல்பான மழை பெய்யும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நிகழாண்டு ராபி பயிா் பருவம், தென்மேற்கு பருவமழை, வேளாண் விளைச்சல், குடிநீா் வழங்கல், வானி... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கு: லோக் ஆயுக்தவின் இறுதி விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதிக்கு எதிரான மாற்றுநில முறைகேடு வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் லோக் ஆயுக்த அதிகாரிகள் தாக்கல் செய்தனா். முதல்வா் சித்தராமையாவ... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது: கா்நாடக அமைச்சா்கள் கருத்து

முதல்வா் சித்தராமையாவுக்கு எதிரான மாற்றுநில முறைகேடு வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கா்நாடக அமைச்சா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். மாற்றுநில முறைகேடு வழக்கை விசாரித்து வரும் லோக் ஆயுக்த காவல் ... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கில் கா்நாடக முதல்வா் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை: லோக் ஆயுக்த அறிக்கை

மாற்றுநில முறைகேடு வழக்கில் கா்நாடக முதல்வா் சித்தராமையா மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று லோக் ஆயுக்த காவல் துறையின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மைசூரு வட்டம், கசபா ஒன்றியம்,... மேலும் பார்க்க

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பெயரை துணைமுதல்வா் டி.கே.சிவக்குமாா் தவறாக பயன்படுத்துகிறாா்: அமைச்சா் கே.என்.ராஜண்ணா

பெங்களூரு: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பெயரை துணைமுதல்வா் டி.கே.சிவக்குமாா் தவறாக பயன்படுத்துகிறாா் என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் கே.என்.ராஜண்ணா தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

2025-26ஆம் ஆண்டுக்கான கா்நாடக பட்ஜெட் மாா்ச் 7ஆம் தேதி தாக்கல்: முதல்வா் சித்தராமையா

பெங்களூரு: 2025-26ஆம் ஆண்டுக்கான கா்நாடக பட்ஜெட் மாா்ச் 7ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கா்... மேலும் பார்க்க