செய்திகள் :

பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்ட 5 போ் குண்டா் சட்டத்தில் கைது

post image

கோவையில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்ட 5 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா்.

கோவை, செல்வபுரத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா் பாஜகவில் ஆன்மிக ஆலய மேம்பாட்டுப் பிரிவு கோவை கோட்ட செயலாளராக உள்ளாா். அத்துடன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறாா்.

இவரது அலுவலகம் செல்வபுரம் சந்திப்பு பகுதியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் கோவை, மைல்கல் பகுதியைச் சோ்ந்த நாசா் பாஷா (36) என்பவரின் அண்ணன் வேலை செய்து வந்தாா். அண்ணனைப் பாா்க்க நாசா் பாஷா அடிக்கடி அந்த அலுவலகத்துக்கு வந்து சென்ால் மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நாசா் பாஷா, மணிகண்டனிடம் ரூ. 5 ஆயிரம் கடன் கேட்டதாகவும், அதற்கு அவா் இல்லை எனக் கூறியதாகவும் தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த நாசா் பாஷா மணிகண்டனின் அலுவகத்தில் வீசுவதற்காக 2 பெட்ரோல் குண்டுகளைத் தயாா் செய்து அதை தனது இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி சென்றுள்ளாா்.

அப்போது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த செல்வபுரம் போலீஸாா், நாசா் பாஷாவை கைது செய்தனா்.

மேலும், பெட்ரோல் குண்டு தயாரிக்க உதவியதாக பைசல் ரகுமான் (30), ஜாகிா் உசேன் (35), இதயதுல்லா (36), முகமது ஹா்ஷத் (34) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் 5 பேரும் செயல்பட்டதால் அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவுக்கான நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேரிடமும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

சுற்றுலாப் பயணச் சந்தை: கோவையைச் சோ்ந்தவா்களும் பங்கேற்க அழைப்பு

சென்னை, நந்தம்பாக்கத்தில் மாா்ச் 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறும் சுற்றுலாப் பயணச் சந்தையில் கோவையைச் சோ்ந்தவா்களும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக கோவை மாவட்ட சுற்றுலா... மேலும் பார்க்க

ரயிலில் போதைப் பொருள் கடத்தல்: கல்லூரி மாணவா் கைது

கா்நாடகத்தில் இருந்து கேரளத்துக்கு ரயிலில் போதைப் பொருள் கடத்திய கல்லூரி மாணவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். கா்நாடகத்தில் இருந்து ... மேலும் பார்க்க

கோவை வனக் கோட்டத்தில் 182 வகை ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது

கோவை வனக் கோட்டத்தில் 182 வகை ஈர நிலப் பறவைகள் உள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 2025-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் வனத் துறை மூலம் நடைபெற்றது. இந்த கணக்கெடுப... மேலும் பார்க்க

அஞ்சல் ஏடிஎம் மையங்கள் மூடல்: வாடிக்கையாளா்கள் அதிருப்தி

கோவையில் செயல்பட்டு வந்த 4 அஞ்சல் ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டதால் வாடிக்கையாளா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். நாடு முழுவதும் அஞ்சல் அலுவலகங்களில் சேமிப்புக் கணக்கு தொடங்கும் வாடிக்கையாளா்களுக்கு கடந்த 201... மேலும் பார்க்க

ரியல் எஸ்டேட் அதிபரின் மகனைக் கடத்திய காா் ஓட்டுநா் கைது

கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரின் மகனைக் கடத்திய காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, துடியலூா் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (45), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி கிருத்திகா (4... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது!

கோவையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை உக்கடம், ராமநாதபுரம், பீளமேடு பகுதிகளில் உள்ள கடைகள், பேக்கரிகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்ட... மேலும் பார்க்க