செய்திகள் :

பெட்ரோல் நிலையத்தில் தகராறு: ஊழியர் அடித்துக் கொலை!

post image

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் ஊழியருக்கும் லாரி ஓட்டுநர் - கிளீனர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

சூலூர் அருகே கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தங்கி வேலை செய்து வருபவர் தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் தாலுகாவைச் சேர்ந்த வீரகாளி( 40).

இவர் நேற்று(மார்ச் 23) வழக்கம்போல பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியில் இருந்தபோது, லாரி ஒன்று பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்துள்ளது. அப்போது பெட்ரோல் நிரப்பும் பகுதி அருகே மோதுவதுபோல் வந்ததால் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்கள், லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனரை திட்டி உள்ளனர்.

அப்போது இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கிருந்து சென்ற லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோர் லாரியை சாலையில் நிறுத்திவிட்டு, பின்னர் மது அருந்தி உள்ளனர்.

மது போதையில் லாரியின் சக்கரத்தை கழற்றப் பயன்படும் இரும்பு ராடையும் ஒரு இரும்பு கம்பியையும் எடுத்துக்கொண்டு மீண்டும் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்துள்ளனர்.

அப்போது வீரகாளி தூங்கிக் கொண்டிருந்துள்ள நிலையில், அவரை இருவரும் இரும்பு ராடால் தாக்கியுள்ளனர். இதில் மண்டை உடைந்து ரத்தம் அதிகமாக வெளியேறி வீரகாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையும் படிக்க: நிதீஷ் குமார் மகனுக்கு திருமணமா? மணப்பெண் யார்?

இதனையடுத்து, போலீஸாருக்கு தகவல் தெரிந்தவுடன் கருமத்தம்பட்டி உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உளவு பிரிவு காவலர் நிதி குமார் ஆகியோர் லாரியின் ஓட்டுநர் மற்றும் கிளீனரை பிடிக்கச் சென்றனர்.

அப்போது, லாரி ஓட்டுநரான தூத்துக்குடியைச் சேர்ந்த சரவணகுமார் (27) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (31) ஆகிய இருவரும் போலீஸார் இடமிருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்ததில் கை எலும்பு முறிந்தது.

இவர்களைப் பிடித்த போலீஸார், அரசூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

திமுக vs தவெக: விஜய்யின் கருத்துக்கு இபிஎஸ் என்ன சொன்னார் தெரியுமா?

பிரதான எதிர்க்கட்சி என்று மக்கள் தங்களை அங்கீகரித்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில்எடப்பாடி பழனிசாமி இன்று(சனிக்கிழமை) செய்தியாளர்களுடன் பேசினார்.... மேலும் பார்க்க

2026-ல் தமிழ்நாடு முதல்வர் யார்? - சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு!

2026-ல் யார் தமிழக முதல்வராக வாய்ப்புள்ளது? என சிவோட்டர் நிறுவனம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிக... மேலும் பார்க்க

நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவி தற்கொலை! திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்!

சென்னையில் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தேவதர்ஷினி, சென்னையில் தனியார் அகாதெமியில் படித்... மேலும் பார்க்க

செங்கோட்டையன் திடீர் தில்லி பயணம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அடுத்தாண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள், கூட்டணி குறித்து ஆலோசித்து வருக... மேலும் பார்க்க

புதிய உச்சத்தில் தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று(சனிக்கிழமை) காலை நிலவர... மேலும் பார்க்க

பாஜக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்!

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு மத்திய அரசு நிதி வழங்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை செல்வோரைத் திரட்டி... மேலும் பார்க்க