செய்திகள் :

பெண்களை தொடக்கூடாது.. தலிபான்களின் உத்தரவால் துயரம்

post image

நிலநடுக்கத்தை விடவும் கொடிய தலிபான் அரசின் அடக்குமுறையால், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் பெண்களை தூக்க உதவியின்றி அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆப்கன் பெண்கள்.

இடிபாடுகளில் சிக்கி உயிருடன் தவித்துக் கொண்டிருக்கும் பெண்களைப் பார்த்ததும், அங்கிருக்கும் மீட்புப் பணியாளர்கள் ஓடிச் சென்று பார்க்க முடியுமே தவிர அவர்களை வெளியே தூக்கிவர முடியாது. காரணம். தலிபான்கள் அரசின் உத்தரவு, அதாவது, அந்த பெண்களுக்கு சம்பந்தமுள்ள ஆண்கள் மட்டுமே அவர்களைத் தொட்டுத் தூக்க வேண்டும். இல்லையென்றால், வேறு யாரும் பெண்களை தொட்டுத் தூக்கக் கூடாது என்பதே அந்த உத்தரவு. ஆண் துணை இல்லாத பல குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் பெண் குழந்தைகளின் நிலையையும் நினைத்து பலரும் கலங்கி நிற்கிறார்கள்.

பல நூற்றாண்டுகள் முந்தைய கலாசாரத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஆப்கனை ஆளும் தலிபான்களின் இந்த உத்தரவால், இடிபாடுகளுக்குள் பல பெண்கள் உயிரோடு சமாதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி வந்ததுமே பெண்களுக்கு எதிரான பல கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுவிட்டன. அங்கு பல குடும்பங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியான நிலையில், ஒரு சில நாள்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானை தாக்கிய நிலநடுக்கத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் பலியாகினர்.

இந்த நிலையில், பெண்களை அவர்களது உறவினர்களான தந்தை, சகோரதரன், கணவர், மகன் மட்டுமே தொட வேண்டும் என்றும், மற்ற ஆண்கள் யாரும் தொடக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதில்லாமல், ஆப்கானிஸ்தானில் பெண்கள் யாரும் மீட்புப் பணியிலும் ஈடுபட முடியாது. இப்படியிருக்க, நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்பதும், காயமடைந்த பெண்கள் மருத்துவமனைக்கு வருவதும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பது தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

காஸா போர்: ஹமாஸுடன் தீவிர பேச்சுவார்த்தை! - டிரம்ப் தகவல்

காஸாவில் ஹமாஸ் அமைப்பினருடன் தீவிர பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான ப... மேலும் பார்க்க

மோடி எனது நண்பர்; சிறந்த பிரதமர்! மாற்றிப் பேசும் டிரம்ப்!

பிரதமர் நரேந்திர மோடியுடன் நண்பராக இருப்பேன், அவர் சிறந்த பிரதமர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு எட்டப்படாததாலும், ... மேலும் பார்க்க

உக்ரைன் போரின் பின்விளைவுகளால் தெற்குலகம் பாதிப்பு: ஐ.நா.வில் இந்தியா

உக்ரைன் போரின் பின்விளைவுகளால் தெற்குலகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா தெரிவித்தது. அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ‘தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் தற்போதுள்ள சூ... மேலும் பார்க்க

பாக். முன்னாள் பிரதமரின் சகோதரியின் மீது முட்டை வீச்சு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின், சகோதரி அலீமா கானின் மீது, 2 பெண்கள் முட்டைகளை வீசியுள்ளனர். பாகிஸ்தானின் தெஹ்ரிக் - இ - இன்சாஃப் கட்சியின் நிறுவனரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரா... மேலும் பார்க்க

சொத்து வரி விவகாரம்! பிரிட்டன் துணைப் பிரதமர் ராஜிநாமா!

சொத்து வரி விவகாரத்தில் சிக்கிய பிரிட்டன் அரசின் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் தனது பதவியை இன்று (செப்.5) ராஜிநாமா செய்துள்ளார். பிரிட்டன் அரசின் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர், சமீபத்தில் இங்கிலாந்தின... மேலும் பார்க்க

போர்ச்சுகலில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்து- 16 பேர் பலி

போர்ச்சுகலில் ஃபுனிகுலர் கேபிள் கார் தடம்புரண்டதில் 16 பேர் பலியாகினர்.ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் புகழ்பெற்ற ஃபுனிகுலர் கேபிள் கார் வியாழக்கிழமை திடீரென தடம்புரண்டது. இந்த சம்பவத்தில் 16 பேர் பலியாக... மேலும் பார்க்க