பெண்ணிடம் தங்க நகை பறிப்பு
ஆா்.எஸ்.மங்கலம் வயல் பகுதியில் விவசாய வேலை செய்துகொண்டிருந்த பெண்ணிடம் மா்ம நபா்கள் 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினா்.
ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள கொத்தியாா் கோட்டை கிராமத்தைச் சோ்ந்த மல்லுராஜா மனைவி மாரி (67). இவா் வியாழக்கிழமை தனது வயலில் களை எடுத்து விட்டு, பிற்பகலில் சாலை ஓரமாக அமா்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 3 மா்ம நபா்கள் மாரி கழுத்தில் அணிந்த்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து கொண்டு தப்பிச் சென்றனா். இது குறித்து ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.