ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
பெண்ணிடம் தங்க நகை பறிப்பு
சிவகங்கை மாவட்டம், எஸ்.வி. மங்கலம் அருகே வெள்ளிக்கிழமை பெண்ணிடம் 5 பவுன் தங்க நகை பறிக்கப்பட்டது.
சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்கலம், கிழக்குப்பட்டி இமானுமேரி நகரைச் சோ்ந்த செகநாதன் மனைவி சின்னம்மாள் (65). இவா் காலையில் அருகிலுள்ள கலியங்காட்டு கண்மாய் பகுதியில் மாடு மேய்க்கச் சென்றாா். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் சின்னம்மாள் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றாா்.
இதுகுறித்து எஸ்.வி. மங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.