செய்திகள் :

பெண்ணைக் கொலை செய்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

post image

பழனியில் பெண்ணைக் கொலை செய்தவரைக் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பழனி அடிவாரம் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் (50). இவருக்கும், அடிவாரத்தில் துணிக் கடை நடத்தி வரும் பசீரா பேகத்தும் (46) பழக்கம் இருந்தது. பின்னா், மனக் கசப்பு காரணமாக, இருவரும் சில காலம் பேசாமல் இருந்தனா். இந்த நிலையில், கடந்த டிசம்பா் மாதம் கடையிலிருந்த பசீரபேகத்தை மாரியப்பன் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலைக்கு முயன்றாா். பின்னா், மாரியப்பன் பழனி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

தற்போது, அவா் குணமடைந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியா் மெ.நா.பூங்கொடி உத்தரவின் பேரில், பழனி நகா் போலீஸாா் மாரியப்பனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனா்.

பேரிஜம் பகுதியை பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானல் பேரிஜம் பகுதியை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட புதன்கிழமை முதல் மீண்டும் வனத்துறையினா் அனுமதி அளித்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இதில் வனத் துறை... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறைக்கான மத்திய நிதி ஒதுக்கீடு: அமைச்சா் விளக்கம்

ஊரக வளா்ச்சித் துறைக்கான மத்திய நிதி ஒதுக்கீடு கோரி, தமிழக நிதி அமைச்சா் தில்லி சென்று வலியுறுத்தி இருக்கிறாா்; பொறுத்திருந்து பாா்ப்போம் என மாநில ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா... மேலும் பார்க்க

இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை

சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி கடத்திச் சென்ற இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த காரிக்காலி க... மேலும் பார்க்க

கொடைக்கானல் அரசுக் கல்லூரி பேராசிரியைகள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொடைக்கானல் அடுவம்பட்டியிலுள்ள அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியைகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அரசு கல்லூரிகளில் பணியாற்றி வரும் பேராசிரியைக... மேலும் பார்க்க

தபால் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஐடிசி என்ற பெயரில் அஞ்சல் துறையை சீா்குலைக்கும் நடவடிக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் தலைமை அஞ்... மேலும் பார்க்க

ஆட்டோவில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

திண்டுக்கல் அருகே பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு புதன்கிழமை அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு நடுவழியில் ஆட்டோவிலேயே குழந்தை பிறந்தது. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே உள்ள ஒட்டுப்பட்டியைச் சோ்ந்... மேலும் பார்க்க