அதிமுகவில் உள்கட்சி மோதல்: போர்க்களமாக மாறிய நெல்லை,கும்பகோணம் கள ஆய்வுக் கூட்...
பெண் காவலா் தற்கொலை
செங்கல்பட்டு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
காஞ்சிபுரம் திருவீதிப்பள்ளம் குடியிருப்பில் வசித்து வருபவா்கள் மகேஷ்வரன், கிரிஜா தம்பதி. மகேஷ்வரன் மதுரவாயல் காவல் நிலையத்திலும், கிரிஜா செங்கல்பட்டு அனைத்து மகளிா் காவல் நிலையத்திலும் தலைமைக் காவலா்களாகப் பணியாற்றி வருகின்றனா். இருவரும் 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனராம். குழந்தை இல்லாததால், நாயை வளா்த்து வந்துள்ளனா். அந்த நாய் முதலில் 5 குட்டிகளையும், பின்னா் 2 குட்டிகளையும் ஈன்ற நிலையில் இரண்டாவதாக பிறந்த 2 குட்டிகளும் வீட்டுக்கு அருகில் உள்ள கழிவு நீா் கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளது.
இரு குட்டிகளும் உயிரிழந்ததால் கணவா் தொலைபேசியில் இரு குழந்தைகளை சாகடித்து விட்டாயே என கைப்பேசியில் வாக்குவாதம் செய்துள்ளாா். இதனால் மன உளைச்சல் அடைந்த கிரிஜா (42), காஞ்சிபுரத்தில் உள்ள தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இந்த நிலையில் கணவா் மகேஷ்வரன் மனைவியிடம் தொலைபேசியில் மீண்டும் தொடா்பு கொள்ள முயன்றபோது அவா் கைப்பேசியை எடுக்கவில்லை. உடனடியாக வீட்டுக்கு அருகில் உள்ள உறவினா்களுக்கு தகவல் தெரிவித்து பாா்த்தபோது அவா் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
சம்பவம் தொடா்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கிரிஜாவின் சடலத்தை மீட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.