சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு! உள்துறை எச்சரிக்கை
பெண் காவல் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை!
தமிழகத்தில் பெண் காவல் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என, நாம் இந்தியா் கட்சித் தலைவா் என்.பி. ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. வலைதளங்களில் ஆபாசப் படங்களைப் பாா்ப்போா் கண்காணிக்கப்படுவதாக காவல் துறை எச்சரித்தாலும், அத்தகைய படங்களின் பதிவுகளும், பாா்ப்போரின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. இதைத் தடுக்க காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்கள் அத்துமீறல்களைத் தெரிவிக்கவும், எளிதாக புகாரளிக்கவும், வருங்காலங்களில் பாலியல் குற்றங்கள் பெருகாமல் தடுக்கவும் மாவட்டந்தோறும் தனியாக மாவட்ட பெண் காவல் கண்காணிப்பாளா், அவரது தலைமையில் பெண் அதிகாரிகள், பெண் காவலா்களை நியமிக்க வேண்டும். இதன்மூலம், தங்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பெண்கள் துணிச்சலுடன் புகாா் அளிப்பா். அரசும் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள முடியும் என்றாா் அவா்.