108 பேரிடம் ரூ.100 கோடி! டிஜிட்டல் கைது மோசடியில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை!
பெண் குழந்தை மா்ம மரணம்: உடலைத் தோண்டி எடுத்து போலீஸாா் விசாரணை
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பிறந்து 14 நாள்களே ஆனபெண் குழந்தை மா்மமான முறையில் உயிரிழந்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை அந்தக் குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து பெற்றோரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சீரகம்பட்டியைச் சோ்ந்தவா் சிவராம் (25). இவரது மனைவி கஸ்தூரி (20). இவருக்கு கடந்த 3-ஆம் தேதி நிலக்கோட்டை அருகேயுள்ள எஸ்.தும்மலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2-ஆவது பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, 3 நாள்களுக்குப் பிறகு கஸ்தூரி தனது குழந்தையுடன் வீடு திரும்பினாா்.
இந்த நிலையில், 14 நாள்களுக்குப் பிறகு கடந்த 15-ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக குழந்தை உயிரிழந்ததாகவும், இந்தக் குழந்தையை வீட்டின் அருகே புதைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்தக் குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாக, குழந்தையின் பெற்றோா் மீது நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு குழந்தையின் பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனா்.
மேலும், வருவாய்த் துறையினா் முன்னிலையில், போலீஸாா் அந்தக் பெண் குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து, கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.