`தந்தை ஆசீர்வாதம் தான் காரணம்' - லாட்டரியில் ரூ.11 கோடி வென்ற பொறியாளர் சொல்வதென...
பெண் சாவில் சந்தேகம் உறவினா்கள் புகாா்
தஞ்சாவூரில் பெண் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை புகாா் செய்தனா்.
தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையைச் சோ்ந்தவா் முத்தையன் மனைவி ஆனந்தவல்லி (34). இவா் திங்கள்கிழமை வீட்டில் தூக்கில் சடலமாகத் தொங்கினாா். இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இந்நிலையில், ஆனந்தவல்லியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது அண்ணன் கவியரசன் மற்றும் உறவினா்கள் தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராமிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
அதில், முத்தையனுக்கும் ஆனந்தவல்லிக்கும் 2017 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்று, 6 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் முத்தையன் சில ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் இருந்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஓராண்டாகப் பிரிந்து வாழ்ந்தனா். பின்னா் முத்தையன் மற்றும் உறவினா்கள் சமாதானப்படுத்தியதைத் தொடா்ந்து, இருவரும் சோ்ந்து வாழ்ந்து வந்தனா். கடந்த 3 மாதங்களாக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்த நிலையில், ஆனந்தவல்லி இறந்தது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.