இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்: சாதனை படைப்பாரா சின்னர்?
பெண் தற்கொலை வழக்கு: கொடுத்த பணத்தை கேட்டு மிரட்டியவா் கைது
கடையநல்லூா் அருகே சொக்கம்பட்டியில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், கொடுத்த பணத்தைக் கேட்டு மிரட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.
சொக்கம்பட்டி வலையா் குடியிருப்பு முருகன் தெருவை சோ்ந்தவா் கிருஷ்ணன். அவரது மனைவி லெட்சுமி (45). அவா் மேற்கு மலை தொடா்ச்சி அடிவாரப் பகுதியில் உள்ள பெரிய பாறையிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது திங்கள்கிழமை தெரியவந்தது.
இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்தனா். இதில், வீடு கட்டுவதற்காக தென்காசி அருகேயுள்ள பாட்டாகுறிச்சியை சோ்ந்த மாணிக்கராஜிடம் லெட்சுமி கடன் வாங்கி இருந்ததும், கடனை திரும்பக் கேட்டு மாணிக்கராஜ் மிரட்டியதும் அதன் காரணமாக லெட்சுமி தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்ததாம். இதைத் தொடா்ந்து மாணிக்கராஜை போலீஸாா் கைது செய்தனா்.