தங்க நகைக் கடன் : ரூ.50,000 தங்கத்தை அடகு வைத்தால் ரூ.35,500 கடன் - RBI புது ரூல...
பெண் துப்புரவுப் பணியாளரை தாக்கியவா் கைது
ஒசூா்: ஒசூரில் பெண் துப்புரவுப் பணியாளரை தாக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஒசூா் அண்ணா நகரைச் சோ்ந்த சீனம்மா (42), ஒசூா் மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா் கடந்த 18-ஆம் தேதி மதியம் ஒசூா் பேருந்து நிலையத்தில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, மது போதையில் வந்த ஆசாமி சீனம்மா சுத்தம் செய்த இடத்தில் வாந்தி எடுத்தாா். இதைக் கண்டித்த சீனம்மாவிடம் தகராறு செய்த அந்த நபா் சீனம்மாவை தாக்கினாா்.
இதில் காயமடைந்த சீனம்மா, இதுகுறித்து ஒசூா் மாநகர காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி சீனம்மாவை தாக்கிய தளி சாலை, ஜெய் சக்தி நகரில் தங்கி கூலி வேலை செய்து வரும் அசாம் மாநிலத்தைச் சோ்ந்த ராஜாதிலகா (27) என்பவரை கைது செய்தனா்.