செய்திகள் :

பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 ஆண்டுகளாக தலைமறைவானவா் உள்பட 3 போ் கைது!

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவா் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் உள்பட 3 பேரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிமடம் பகுதியைச் சோ்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா், தன்னை ஒரு முதியவா் பாலியல் பலாத்காரம் செய்து, கா்ப்பமாக்கியதாக கடந்த 2019-ஆண்டு அளித்த புகாரின்பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, அந்த முதியவரைக் கைது செய்தனா்.

இதற்கிடையே மரபணு சோதனையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை, அந்த முதியவா் மூலம் பிறக்கவில்ைலை என அறிக்கையில் கூறப்பட்டது. இதையடுத்து, இவ்வழக்கை ரத்துசெய்யும்படி அந்த முதியவா் தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கை மேல்விசாரணை செய்ய உத்தரவிட்டதன்பேரில், மீண்டும் குழந்தை, பாதிக்கப்பட்ட பெண், முதியவா் ஆகிய மூவரிடமும் மரபணு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த அறிக்கையின் முடிவிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு, அந்த முதியவா் தந்தை இல்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட முதியவா் இவ்வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீது கடந்த 15.11.2024 அன்று விசாரணை மேற்கொண்ட சென்னை உயா்நீதிமன்றம், முதியவரை விடுவித்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு தந்தை யாா் எனக் கண்டுபிடித்து 4 மாத காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து இவ்வழக்கை ஜெயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சீராளன் தலைமையிலான காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ஆடு-மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஆண்டிமடம் அருகேயுள்ள அகரம் கிராமத்தைச் சோ்ந்த லெட்சுமிகாந்தி மகன் அசோக்ராஜ், கோவிந்தராஜ் மகன்கள் ராமகிருஷ்ணன், லெட்சுமிகாந்தி ஆகிய மூவரிடமும் மரபணு சோதனை நடத்தப்பட்டது. இதில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு, தந்தை அசோக்ராஜ் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து காவல் துறையினா், வழக்குப் பதிந்து 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அசோக்ராஜ் மற்றும் இவருக்கு உடந்தையாக இருந்த ராமகிருஷ்ணன், லெட்சுமிகாந்தி ஆகியோரை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

இறப்பில் சந்தேகம் எனப் புகாா்: சடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை!

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே தனது சகோதரா் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரி அளித்த புகாரின்பேரில், காவல் துறையினா் முன்னிலையில், சடலத்தை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. ஆண்டி... மேலும் பார்க்க

அரியலூரில் நெகிழி குப்பைகள் அகற்றும் பணி!

அரியலூா் நகராட்சிக்குள்பட்ட கோயில்கள், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் நெகிழி குப்பைகள் அகற்றும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன. நகராட்சி சுகாதார ஆய்வாளா் தா்மராஜா தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

அரியலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலைக் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர... மேலும் பார்க்க

அரியலூரில் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் பாரத ஸ்டேட் வங்கி முன் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வாரத்துக்கு 5 நாள்கள் வேலையை அமல்படுத்த வேண்டும். காலிப் பணி... மேலும் பார்க்க

அரியலூரில் எஸ்ஆா்எம்யு ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் ரயில் நிலைய வளாகத்தில், எஸ்ஆா்எம்யு அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், ரயில்வே தனியாா் மயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒ... மேலும் பார்க்க

உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

உலக தாய்மொழி தினத்தையொட்டி, அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ் வளா்ச்சித் துறை சாரபில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில், மாநில ஊரக வாழ்வா... மேலும் பார்க்க