``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
பெண் மருத்துவா் தூக்கிட்டு தற்கொலை
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பெண் மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கேரள மாநிலம் திருச்சூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஜூவாலா (35). மருத்துவரான இவா் புற்றுநோய் சிகிச்சை தொடா்பான மேற்படிப்புக்காக கடந்த 8-ஆம் தேதி சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் சோ்ந்தாா்.
சென்னை காந்தி நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த அவா், செவ்வாய்க்கிழமை காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடியிருப்பின் மேலாளா் டைசன் சேவியா், கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, மருத்துவா் ஜூவாலா, தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தாா்.
இதுகுறித்து அடையாறு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, நடத்திய விசாரணையில், திருமணமாகி விவாகரத்து பெற்று கடந்த இரண்டரை ஆண்டுகளாக தனிமையில் வசித்த ஜூவாலா, மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.