செய்திகள் :

பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோ மீண்டும் இணையதளங்களில் எவ்வாறு பரவுகிறது?: உயா்நீதிமன்றம் கேள்வி

post image

சென்னை: பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோக்களை அகற்ற உத்தரவிட்ட பிறகும், தமிழகத்தில் மட்டும் மீண்டும் இணையதளங்களில் எவ்வாறு பரவுகிறது? என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பெண் வழக்குரைஞா் ஒருவா் தனது கல்லூரி காலத்தில், ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்த விடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் பகிரப்பட்டிருந்தன. இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அந்த விடியோ மற்றும் புகைப்படங்களை அகற்ற உத்தரவிடக் கோரி பெண் வழக்குரைஞா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பகிரப்பட்டிருந்த விடியோ மற்றும் புகைப்படங்களை 48 மணி நேரத்தில் அகற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட்டதுடன், பெண் வழக்குரைஞா் தொடா்பான விடியோ மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள அனைத்து இணையதளங்களையும் முடக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோ பகிரப்பட்டுள்ள 8 இணையதளங்களில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, பெண் வழக்குரைஞா் தரப்பில், அந்தரங்க விடியோ தமிழகத்தில் தற்போது 3 இணையதளங்களில் பரவி வருகிறது. மேலும் புதிதாக ஒரு இணையதள இணைப்பு வழியாக பகிரப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோக்களை அகற்ற உத்தரவிட்ட பிறகும், தமிழகத்தில் மட்டும் அது மீண்டும் மீண்டும் எவ்வாறு பரவுகிறது? இந்த வழக்கின் புலன் விசாரணை எந்த நிலையில் உள்ளது? என்று கேள்வி எழுப்பினாா்.

அப்போது, சென்னை இணையக் குற்றப்பிரிவு தரப்பில், இந்த வழக்கின் புலன் விசாரணை முடிந்து இறுதி அறிக்கை தயாராக இருக்கிறது. தடய அறிவியல் துறையின் அறிக்கைக்காகக் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, நல்ல தகவல்களை உள்ளடக்கிய விடியோக்கள் இணையதளத்தில் இருந்து நீக்கப்படுகின்றன. மோசமான விடியோக்கள் அதி வேகமாக பரவுகின்றன என வேதனை தெரிவித்தாா்.

பின்னா், பெண் வழக்குரைஞா் அந்தரங்க விடியோ இடம்பெற்றுள்ள புதிய இணைப்பு உள்பட 4 இணையதளங்களையும் முடக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்.11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

இந்தியாவில் 1 கோடி பள்ளி ஆசிரியா்கள்: நாட்டில் முதல்முறை

How come the intimate videos of a female lawyer are being circulated again on websites only in Tamil Nadu, even after being ordered to be removed?

விஜய் வருகை 2026 தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்: பிரேமலதா விஜயகாந்த்

தூத்துக்குடி: தவெக தலைவா் விஜயின் வருகை, 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

ஜம்முவில் ரயில் சேவைகள் மூன்றாவது நாளாக நிறுத்தம்

ஜம்முவில் ரயில் போக்குவரத்து தொடர்ந்து மூன்றாவது நாளாக முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வடக்கு ரயில்வே அதிகாரிகள் இன்று ஜம்முவுக்குச் சென்று வரும் 40 திட்டமிடப்பட்ட ரயில்கள் சேவையும் ரத்து செய்... மேலும் பார்க்க

காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி. சசிகாந்த் செந்தில்!

திருவள்ளூர்: தமிழக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை வழங்காத மத்திய பாஜக அரசை கண்டித்து மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில், திருவள்ளூரில் வெள்ளிக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்... மேலும் பார்க்க

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் ... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 6568 கன அடியில் இருந்து 8,562 கன அடியாக அதிகரித்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000கன அடி வீ... மேலும் பார்க்க

அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: இந்தியா நம்பிக்கை

புது தில்லி: அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்கும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப... மேலும் பார்க்க