புது அவதாரத்தில்;மிர்ச்சி சிவா; யுவன் இல்லாமல் முதல் ராம் படம்!
பென்னாகரம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்
பென்னாகரம் அருகே தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தி தராததைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
பென்னாகரம் அருகே தொன்ன குட்ட அள்ளி பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தித் தரக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், திங்கள்கிழமை 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே தொன்னகுட்ட அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தாளப்பள்ளம், புதுக்காடு, ஊர் நத்தம், சீலநாயக்கனூர், மணியகாரன் கொட்டாய், பாய்பள்ளம், மேட்டூரான் கொட்டாய் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியானது அடர்ந்த மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால் தொலைத்தொடர்பு வசதி முற்றிலும் ஏற்படுத்தப்பட முடியாமல் இருந்துள்ளது.
கிராமப் பகுதிகளுக்கு தொலை தொடர்பு வசதி இல்லாததால் அவசர தேவைகள், அரசின் சேவைகள், சலுகைகள் பெற விண்ணப்பித்தல் உள்ளிட்ட இதர தேவைகளுக்காக சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏரியூர் பகுதிக்கும், சில நேரங்களில் அருகில் உள்ள மலை குன்றுகளின் மீது ஆபத்தான முறையில் நின்று தொலை தொடர்பு கிடைக்கும் பட்சத்தில் அவசர தேவைக்கான அழைப்புகளை பெற்று வருவதாகவும், தொன்னகுட்ட அள்ளி பகுதியில் தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தித் தரக்கோரி மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஆகியோர்களிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து சுமார் 15-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முதுகம்பட்டி - ஏரியூர் செல்லும் சாலையில் ஊர் நத்தம் என்னும் இடத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பிகாரில் கள்ளச் சாராயம் குடித்து 7 பேர் பலி!
இதுகுறித்து தகவல் அறிந்த ஏரியூர் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்றும் சுமூக முடிவு எட்டப்படாததால் தொடர்ந்து சாலை மறியல் நடைபெற்று வருகிறது.
தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டுள்ளதால் அவ்வழியாக செல்லும் அரசு பேருந்துகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு சுமார் 3 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகி வருகிறது.