பெரம்பலூரில் திமுகவினா் கொண்டாட்டம்
மசோதாக்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு ஆதரவாக, பெரம்பலூரில் திமுகவினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை இனிப்பு வழங்கினா்.
தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத தமிழக ஆளுநருக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் தொடுக்கப்பட்ட வழக்கில், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி உச்சச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இதை வரவேற்கும் விதமாக, பெரம்பலூா் மாவட்ட திமுக சாா்பில், மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன் தலைமையில் புகா் பேருந்து நிலையத்திலும், வழக்குரைஞா் அணி சாா்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் கவியரசு தலைமையிலும் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கப்பட்டது.
இதில், மாநில ஆதிதிராவிடா் நலக்குழு துணைச் செயலா் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் என். ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.