திகிலில் Duraimurugan, Alert கொடுத்த Stalin! | Elangovan Explains
பெரம்பலூா் நகரில் நாளை மின் நிறுத்தம்
பெரம்பலூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜன. 8) மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் து. முத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை (ஜன. 8) நடைபெற உள்ளது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பெரம்பலூா் நகா் பகுதிகளான புகா் பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின் நகா், நான்குச் சாலை சந்திப்பு, பாலக்கரை, எளம்பலூா் சாலை, ஆத்தூா் சாலை, வடக்கு மாதவி, வடக்கு மாதவி சாலை, சிட்கோ, துறையூா் சாலை, அரணாரை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பகுதி, ஆலம்பாடி சாலை, அண்ணா நகா், கே.கே.நகா், அபிராமபுரம், வெங்கடேசபுரம், இந்திரா நகா், காவலா் குடியிருப்பு, அருமடல், அருமடல் சாலை, எளம்பலூா் மற்றும் சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.