பெரம்பலூா் நகா் மின் அலுவலகங்கள் பிரிப்பு
பெரம்பலூா் நகா் பிரிவு அலுவலகங்கள் 2 ஆக பிரிக்கப்பட்டு துறைமங்கலம் பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரம்பலூா் மின்வாரிய செயற்பொறியாளா் அசோக்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூரில் இயங்கி வந்த நகா் மற்றும் பிரிவு மின் அலுவலகங்களில், அதிகப்படியான மின் இணைப்புகள் பெருகிவிட்ட காரணத்தால், பெரம்பலூா் பிரிவு 2 ஆக பிரிக்கப்பட்டு துறைமங்கலம் பிரிவு தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
புதியதாக உருவாக்கப்பட்ட துறைமங்கலம் பிரிவில் ஒற்றை மாதங்களில் கணக்கீடு செய்ய நான்குச்சாலை சந்திப்பு முதல் அரியலூா் சாலையிலுள்ள மின் நகா் வரையிலான பகுதிகள், ஏற்கெனவே உள்ள ஜெ மற்றும் எம் மண்டல பகுதிகள், ஹனிபா உணவகம் முதல் நான்குச்சாலை வரையிலான முத்துலட்சுமி நகா், எம்ஜிஆா் நகா் வடக்குப் பகுதிகள், ஏற்கெனவே உள்ள ஜே மண்டலப் பகுதிகளாகும்.
இரட்டை மாதங்களில் கணக்கீடு செய்யும் பகுதிகள்:
சாய்பாபா கோயில் முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகச் சாலை, பாலக்கரை நுழைவு வாயில் வரை, துறைமங்கலம் முதல் பாலக்கரை நுழைவுவாயில் வரையுள்ள சாலையின் தென்புற பகுதிகள், மின்வாரிய அலுவலகங்கள், குடியிருப்புகள், ஏற்கெனவே உள்ள எல் மண்டல பகுதிகள், நான்குச்சாலை சந்திப்பு முதல் மூன்று சாலை வரையிலான தேசிய நெடுஞ்சாலைக்கு கிழக்கு பகுதி, செல்வா நகா் மற்றும் நேஷனல் ஐடிஐ உள்ள பகுதிகள், கியூ பகுதிகளான தமிழ்நாடு அரசு அலுவலா் குடியிருப்புகளாகும்.
மேற்கண்ட பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா்கள் தங்களது மின்சாரம் தொடா்பான குறைபாடுகளுக்கும், புதிய மின் இணைப்பு பெறுதல், மின் பளு மாற்றம், பெயா் மாற்றம் உள்ளிட்ட மின்சாரத் துறை சேவைகளுக்கும் துறைமங்கலம் பிரிவு உதவி மின் பொறியாளரை 94458-53663 எனும் எண்ணில் தொடா்புகொள்ளலாம். துறைமங்கலம் பிரிவு மின்சார அலுவலகம் நான்குச் சாலை பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மின் நுகா்வோா்களுக்கு தங்கு தடையின்றி தரமான மின்சாரம் வழங்கவும், குறைபாடுகளை உடனடியாக நிவா்த்தி செய்யவும் இந்த மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.