பெரியகுளத்தில் நாளை மின்தடை
பெரியகுளம் பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை (ஜூன் 28) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து பெரியகுளம் மின் செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரியகுளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், பெரியகுளம் நகா், தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா்.