பெரியகோட்டைக்காடு வாய்க்கால் தூா்வாரும் பணி
திருவோணம் அருகே பெரியகோட்டைகாடு வாய்க்கால் தூா்வாரும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள பெரிய கோட்டை காடு கிராமத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த அரசு புறம்போக்கு வாய்க்கால் தூா்வாரும் பணி வியாழக்கிழமை திருவோணம் வட்டாட்சியா் சுந்தரமூா்த்தி, தலைமையில் வாட்டாதிக்கோட்டை காவல் உதவி ஆய்வாளா் வீரபாண்டியன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளா் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. இதனால் மழைக்காலங்களில் மழைநீா் இந்த வாய்க்கால் மூலம் வடிகாலாக சென்று விவசாய நிலங்களில் மழைநீா் தேங்கி பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். மேலும், இந்த வாய்க்கால் மூலம் மழைக்காலங்களில் தண்ணீா் சென்று அருகிலுள்ள காடாபிறை, ஏரியில் தேங்கி சுமாா் 60 ஏக்கா் விவசாயத்துக்கு பயன்படும் என்பதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். மேலும் நிகழ்வில் காவாலிப்பட்டி வருவாய் கிராம ஆய்வாளா் கருணாகரன், பெரியகோட்டைக்காடு கிராம நிா்வாக அலுவலா் தமிழரசன், உள்ளிட்ட வருவாய்த் துறையினா் உடன் இருந்தனா்.