செய்திகள் :

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

post image

பெரியாரின் போராட்டங்கள் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் தந்தை பெரியாரின் பிறந்தநாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டு வருகின்றது. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பெரியாருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”பெரியார் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறோம். சாதிய ஒடுக்குமுறை மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான அவரது இடைவிடாத போராட்டம் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுகிறது.

பெரியாரின் பகுத்தறிவு, சமத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகிய கொள்கைகள், நீதி மற்றும் முற்போக்கான சமூகத்திற்கான நமது போராட்டத்திற்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கேரள மாநிலம் வைக்கத்தில் பெரியாரின் சிலைக்கு அரசு சார்பில் கோட்டயம் மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.

Kerala Chief Minister Pinarayi Vijayan has posted that Periyar's struggles guide us from generation to generation.

இதையும் படிக்க : மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இதையொட்டி அவருக்... மேலும் பார்க்க

மோடியின் தாயார் ஏஐ விடியோ: உடனே நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்த செய்யறிவு(ஏஐ) சர்ச்சை விடியோவை உடனடியாக நீக்குமாறு காங்கிரஸூக்கு பாட்னா உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது.செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்த... மேலும் பார்க்க

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

கோவா மாநிலம் கனகோனாவைச் சேர்ந்த 59 வயது முதியவர் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியால் ரூ. 80 லட்சம் பணத்தை இழந்துள்ளார். 'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் இணையவழி மோசடியால் பலரும் பாதிக்கப்பட்டு தங்கள் பணத்தை இழந்து வ... மேலும் பார்க்க

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

டிஜிட்டல் அரெஸ்ட் எனும் இணையவழி மோசடியால் ஹைதராபாத்தைச் சேர்ந்த 76 வயது ஓய்வுபெற்ற அரசு பெண் மருத்துவர் மரணமடைந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் இணையவழி மோசடி தற்ப... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

ஆப்ரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையிட்டதாகக் கூறியதைப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நிராகரித்துள்ளார். மத்திய அரசு ஏற்பாடு செய்த ஹ... மேலும் பார்க்க

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூன்று வாரங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டு கனரக வாகனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஜம்முவில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து முக்கியமான நெடுஞ்ச... மேலும் பார்க்க