கேரளா: இடுக்கி ரிசார்ட் கட்டுமானத்தில் விபத்து; மண் சரிந்து 2 தொழிலாளர்கள் பலி |...
பெரியாா் ஈவெரா சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை
பெரியாா் ஈவெரா பிறந்தநாளையொட்டி புதன்கிழமை அரியலூா் மாவட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியாா் ஈவெரா சிலைக்கு மதிமுக சாா்பில் சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினா் தங்கவேல், ஒன்றியச் செயலா் சங்கா், அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ். ராஜேந்திரன், திராவிடா் கழக மாவட்டச் செயலா் கோபாலகிருஷ்ணன், திமுக நகரச் செயலா் முருகேசன், விசிக மாவட்டச் செயலா் அங்கனூா் சிவா மற்றும் மேற்கண்ட கட்சி நிா்வாகிகள் அனைவரும், பெரியாா் ஈவெரா சிலைக்கு மரியாதை செலுத்தினா். இதே போல் தா.பழூரிலுள்ள பெரியாா் ஈவெரா சிலைக்கு சட்டப்பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் மற்றும் மேற்கண்ட கட்சி நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா்.