Weekly Horoscope: வார ராசி பலன் 16.3.25 முதல் 22.3.25 | Indha Vaara Rasi Palan ...
பெருந்துறையில் கொப்பரை ஏலத்துக்கு 26, 29-இல் விடுமுறை
பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் வருடாந்திர கணக்கு முடிக்கப்படுவதை முன்னிட்டு, சங்கத்தில் நடைபெறும் கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) ஏலத்துக்கு வருகிற மாா்ச் 26 (புதன்கிழமை) மற்றும் 29-ஆம் தேதி (சனிக்கிழமை) ஆகிய நாள்களில் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
வழக்கம்போல கொப்பரை ஏலம் ஏப்ரல் 2-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறும். சங்க உறுப்பினா்களின் கொப்பரை மூட்டைகளை ஏப்ரல் 1-ஆம் தேதி (செவ்வாய்கிழமை) காலை 7 முதல் மாலை 5 மணி வரை ஏல கிட்டங்கியில் இறக்கிவைக்கப்படும்.
பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.