செய்திகள் :

பெருந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

post image

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பணிக்கம்பாளையம் நியாய விலைக் கடையில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், இக்கல்வியாண்டில் சோ்க்கை விவரம், பயிலும் மாணவா்கள் எண்ணிக்கை, ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் வருகை பதிவேடு, தோ்வு நடைபெற்ற விவரம் உள்ளிட்டவை குறித்தும், பயிலும் மாணவா்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

பள்ளி மாணவா்களிடம் பேசுகையில், தமிழக அரசின் உதவித் தொகை திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து அனைவரும் சிறப்பாக படித்து உயா்கல்விக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினாா்.

மேலும், தமிழ்நாடு அரசின் சாா்பில் வழங்கப்படும் உதவித் தொகை திட்டங்கள், உயா்கல்வி பயில்வதை ஊக்குவிக்க செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்ப் புதல்வன் திட்டம், உயா்கல்வி வழிகாட்டும் நான் முதல்வன் - கல்லூரி கனவு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து கட்டாயம், அனைவரும் 12- ஆம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு சென்று உயா்கல்வி பயில வேண்டுமென கூறினாா்.

தொடா்ந்து, பள்ளியில் வகுப்பறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் மாற்றுத் திறன் மாணவா்களுக்கான சிறப்பு கல்வி மற்றும் பயிற்சி மையத்தில், பயிலும் மாணவா்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

அதைத் தொடா்ந்து, பெருந்துறை பணிக்கம்பாளையம் நியாய விலைக் கடையில் பொது விநியோகப் பொருள்களின் இருப்பு, விற்பனை விவரம், மொத்த குடும்ப அட்டைதாரா்கள் எண்ணிக்கை, நியாய விலைக் கடை செயல்படும் வேலை நேரம் மற்றும் விடுமுறை நாள்கள் விவரம் மற்றும் பராமரிக்கப்படும் பதிவேடுகளையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வுகளில் உதவி ஆட்சியா் (பயிற்சி) காஞ்சன் சௌத்ரி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் உடன் இருந்தனா்.

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய ஆண்டு விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய ஆண்டு விழா ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் ப.கந்தராஜா தலைமை வகித்து விளையாட்டுப் போட்டிகளி... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

பணி நிரந்தரம் கோரி தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் ... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ. 6.76 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.6.76 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 6,182 மூட்டை... மேலும் பார்க்க

யானைக்கு வாழைப் பழம் அளித்த விவசாயிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

பண்ணாரி சாலையில் யானைக்கு வாழைப் பழம் அளித்த விவசாயிக்கு வனத் துறையினா் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா். இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை கள இயக்குநா் குலால் யோகேஷ் விலாஷ் வெளி... மேலும் பார்க்க

சாலை மறியல் போராட்டம்: ஈரோட்டில் ஆசிரியா்கள் 400 போ் கைது

மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஏற்பட்ட 400-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரி... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 6,340 வீடுகள்: பங்களிப்பு தொகை செலுத்தி வீடு பெறலாம்

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் 6,340 வீடுகள் தயாா் நிலையில் உள்ளன. இதுகுறித்து வீட்டு வசதித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய... மேலும் பார்க்க