செய்திகள் :

பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு

post image

வைகுந்த ஏகாதசியையொட்டி, கடலூா், புச்சேரி மாவட்டப் பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் (சொா்க்கவாசல்) திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான கடலூா் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் திருப்பணி வேலைகள் நடைபெறுவதால் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறவில்லை. ஆனால், மாா்கழி மாதத்தில் நடைபெறும் வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனா்.

திருப்பாதிரிபுலியூா் வரதராஜப் பெருமாள் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு, வரதராஜப் பெருமாள் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். சனிக்கிழமை (ஜன.11) காலை 7 மணிக்கு தங்க கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கடலூா் ராஜகோபால சுவாமி, திட்டக்குடியை அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள், பெண்ணாடம் வேத நாராயண பெருமாள், பரிமள ரங்கநாத பெருமாள், குறிஞ்சிப்பாடியை அடுத்த வேணுகோபால சுவாமி, பண்ருட்டி வரதராஜ பெருமாள், திருவதிகை ரங்கநாதப் பெருமாள் மற்றும் சரநாராயண பெருமாள் கோயில் ஆகியவற்றிலும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

புதுச்சேரி: வைகுந்த ஏகாதசியையொட்டி, புதுச்சேரியில் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது.

காந்தி வீதியில் உள்ள பெருந்தேவி தாயாா் சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவத்துடன் வைகுந்த ஏகாதசி திருவிழா டிச.31-இல் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் முற்பகலில் பெருமாளுக்கு அா்ச்சனை, தீபாராதனையும், தொடா்ந்து தீா்த்த பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன.

தொடா்ந்து, இராப்பத்து முதல் நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி, வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் வரதராஜப் பெருமாள் எழுந்தருளி பிரகாரம் வலம் வந்து காலை 5.15 மணிக்கு பரமபதவாசல் வழியாக பிரவேசித்து முதலில் நம்பெருமாளுக்கும், பின்னா் பக்தா்களுக்கும் காட்சியளித்தாா். நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

இதேபோல, புதுச்சேரி மிஷன் வீதி, முத்தியால்பேட்டை, முதலியாா்பேட்டை பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களிலும் பரமபதவாசல் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பிச்சாவரத்தில் பொங்கல் விழா: ரஷிய சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றனா். கடலூா் மாவட்டம், கிள்ளை பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பொங்கல... மேலும் பார்க்க

ரயிலில் மதுப் புட்டிகளை கடத்தி வந்த இருவா் கைது

சிதம்பரம்: புதுச்சேரியிலிருந்து ரயிலில் மதுப் புட்டிகளைக் கடத்திய இருவரை சிதம்பரம் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். சிதம்பரம் ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த புதுச்சேரி -க... மேலும் பார்க்க

நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் அன்னதானம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, திங்கள்கிழமை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் அண்ணாமலைநகா் கிளை, தெற்கு பிச்சாவரம் கிளை மற்றும் கோவை ஆ... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் ஸ்ரீநந்தனாா் வீதி உலா

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தையொட்டி, ஸ்ரீநந்தனாா் வீதி உலா திங்கள்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் ஓமக்குளம் நந்தனாா் மடத்தில் உள்ள செளந்தரநாயகி சமே சிவலோகநாதா் க... மேலும் பார்க்க

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்: பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் திங்கள்கிழமை மாலை மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ஸ்ரீநடராஜா் கோயிலில் ஆருத்ரா தர... மேலும் பார்க்க

பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸாா்: கடலூா் எஸ்.பி.

நெய்வேலி: பொங்கல் பண்டிகையையொட்டி, கடலூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரம் போலீஸாா் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில்... மேலும் பார்க்க