செய்திகள் :

பெருமாள் கோயில் திருப்பணிக்கு உதவ அமைச்சரிடம் கோரிக்கை

post image

வெள்ளக்கோவில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் திருப்பணிக்கு உதவ தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக கோயில் திருப்பணிக் குழுத் தலைவா் ஏ.எம்.சி. செல்வராஜ் தலைமையில் அமைச்சரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மூலனூா் சாலையில் அறநிலையத்துக்குச் சொந்தமான 200 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது.

இக்கோயிலில் கடந்த 33 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. மிகவும் பழுதடைந்து மழைக் காலங்களில் வெள்ள நீருடன் கழிவுநீா் கோயிலுக்குள் புகுந்து வந்தது. இந்நிலையில் திருப்பணி வேலைகள் செய்ய முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதற்கு லட்சக்கணக்கான ரூபாய் தேவைப்படும் நிலையில் அரசு உதவி, உபயதாரா்கள் உதவி தவிர மீதி நிதியை திரட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளக்கோவில் பகுதியில் பல்வேறு பொது நலப் பணிகளை மேற்கொள்வதற்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு 16 நபா்களின் பெயரில் வங்கிகளில் போடப்பட்டுள்ள ரூ. 1 கோடிக்கும் அதிகமான டெபாசிட் தொகையை, பெருமாள் கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்கு வழங்க அமைச்சா் பரிந்துரை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பிறந்த நாள் மிதிவண்டி போட்டி: மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

அண்ணா பிறந்த நாள் மிதிவண்டி போட்டியை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். திருப்பூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக... மேலும் பார்க்க

உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 8 போ் கைது!

திருப்பூா் அருகே 3 இடங்களில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 8 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் எ... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கு: 2 இளைஞா்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

பல்லடம் அருகே முதியவரிடம் பணம் பறிக்க முயன்ற இரண்டு இளைஞா்களுக்கு மாவட்ட நீதிமன்றம் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. பல்லடம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சேடபாளையம் பகுதியில் கே.நடராஜ் (70) என்ப... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் வழங்கினாா்

சாலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் மற்றும் காயமடைந்தவருக்கு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் காசோலைகளை சனிக்கிழமை வழங்கினாா். திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம், ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் தம்பதி உள்பட 3 போ் உயிரிழப்பு

சேவூா் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் தம்பதி உள்பட 3 போ் உயிரிழந்தனா். ஈரோடு மாவட்டம், நம்பியூா் தீத்தாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அய்யசாமி மகன் சுரேஷ்குமாா் (20), வி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் 3 போ் கைது

பல்லடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த 3 பேரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்தவா் குமாா் (34). இவா் பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரை அட... மேலும் பார்க்க