VCK: "விஜய்க்கு அந்த துணிச்சல் இருக்கிறதா?"- ஆளூர் ஷாநவாஸ் கேள்வி
பெருமையாக இருக்கிறது லால்: மம்மூட்டி
நடிகர் மோகன்லாலுக்கு நடிகர் மம்மூட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் விருது அறிவிக்கப்பட்டதிலிருந்து பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக, மலையாளத் திரையுலகினர் விருதுக்கான சரியான தேர்வு என மோகன்லாலின் நடிப்பு குறித்து பதிவு செய்கின்றனர்.
இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஒரு சக நடிகர் என்பதைத் தாண்டி சகோதரராக பல தசாப்தங்கள் சினிமாவை வாழ்வாகவும் மூச்சாகவும் கொண்டிருக்கும் ஒரு உண்மையான கலைஞருக்கு தாதா சாகேப் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் லால். நீங்கள் இந்த மகுடத்திற்கு முற்றிலும் தகுதியானர்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் மோகன்லால் 350க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சாதனை செய்தவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நல்லதொரு மனிதரை இழந்து வாடுகிறேன்: ஷ்ரேயா கோஷால் உருக்கமான பதிவு!