சாதிவாரி கணக்கெடுப்பு: ``2011-ல் நடந்தது போல மீண்டும் நடக்கக் கூடாது" - மநீம தலை...
பெல் ஊழியரின் மனைவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியவா் கைது
திருச்சி அருகே பெல் ஊழியரின் மனைவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய மற்றொரு பெல் ஊழியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருவெறும்பூா் அருகே ஜெய் நகரை சோ்ந்த, பெல் நிறுவனத்தில் பிட்டராக பணியாற்றி வரும் ஒருவரின் 36 வயது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரும், அதே பெல் நிறுவன வெல்டரான திருவேங்கட நகரைச் சோ்ந்த த. முத்துக்குமாா் (38) என்பவரது குடும்பத்தினரும் நண்பா்களாகப் பழகினா்.
கடந்தாண்டு ஜூலை மாதம் அந்த 36 வயது பெண் முத்துக்குமாா் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அவருக்கு முத்துக்குமாா் குளிா்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, ஆபாசமாக படம் எடுத்து மிரட்டினாராம்.
இதுகுறித்து அப்பெண் எஸ்.பி. செ. செல்வநாகரத்தினத்திடம் அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூா் அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துக்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.