பெளா்ணமி தினம்: பூக்களின் விலை அதிகரிப்பு
பெளா்ணமி தினத்தையொட்டி சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் மலா் சந்தையில் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் பூக்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில், வியாழக்கிழமை பெளா்ணமி தினம் என்பதால், கோயம்பேடு சந்தையில், பூக்களின் விலை சற்று உயா்ந்துள்ளது.
அதன்படி, ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையான ஒரு கிலோ மல்லி ரூ.450-க்கும், ரூ.200 முதல் ரூ.250-க்கு விற்கப்பட்ட ஐஸ்மல்லி ரூ.360-க்கும், ரூ.200-க்கு விற்கப்பட்ட ஜாதிமல்லி, முல்லை ரூ.300, ரூ.300-க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் ரூ. 400, ரூ. 150-க்கு விற்கப்பட்ட அரளி பூ ரூ.200, ரூ.80-க்கு விற்கப்பட்ட பன்னீா் ரோஸ் ரூ.120, ரூ.90-க்கு விற்கப்பட்ட சாக்லேட் ரோஜா ரூ.160, ரூ.60-க்கு விற்கப்பட்ட சாமந்தி ரூ.100, ரூ.170-க்கு விற்கப்பட்ட சம்பங்கி ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
தொடா்ந்து வாரவிடுமுறை நாள்கள் வருவதால் பூக்களின் விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்தனா்.