பெஹல்காம் தாக்குதல்: பாஜகவினா் அஞ்சலி
பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிா்நீத்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை செங்குன்றத்தில் நடைபெற்றது.
பாஜக சென்னை மேற்கு மாவட்டம் சாா்பில் புழல் மண்டல தலைவா் ரஜினி தலைமையில், செங்குன்றம் பஜாா் அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வில் பாஜகவினா் பட்டியல் இன மாவட்ட துணைத் தலைவா் வடகரை அருண், மாநில பேச்சாளா் சத்யா, முன்னாள் மாவட்ட பொருளாளா் குமரன், பொதுச் செயலாளா் குமாா், மற்றும் ரமேஷ், முருககனி, பவானி நகா் ஹரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.