செய்திகள் :

பெ.சண்முகம்: `சாதி, மதம் மறுப்பு காதல் திருமணம்; 50 ரூபாய் செலவு’ - குடும்பம் முதல் அரசியல் வரை..!

post image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் உடனான நேர்காணலில் நமது பல்வேறு கேள்விகளுக்கு நிதானமாக பதில் அளிக்கிறார். இதில் அவரின் குடும்பம், அரசியல் வருகை, களப்பணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுகிறார்.

``இந்திய மாணவர் சங்கம் தொடங்கி மிக நீண்ட பயணம் உங்களுடையது, தற்போது மாநிலச் செயலாளராக பதவி ஏற்றுள்ளீர்கள் இந்த தருணத்தை எப்படி பார்க்கிறீர்கள்?”

``40 ஆண்டுகால அரசியல் பயணத்தின் ஒரு தொடர்ச்சி தான் இது. எனக்கு இது ஒன்றும் புதிதல்ல. இந்திய மாணவர் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அதன் தொடர்ச்சியாக இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்பது இது முழுக்க முழுக்க கட்சி சார்ந்த அரசியல் பணியாக இருக்கும். அதுதான் ஒரு வித்யாசமே தவிர மற்றபடி ஒரு நீண்ட அரசியல் பயணத்தின் தொடர்ச்சி தான் இப்போது மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது. இது ரொம்ப மகிழ்ச்சியான நிகழ்வுதான். கட்சியினுடைய மாநில செயலாளர் என்பது மிக முக்கியமான பொறுப்பு தான். விழுப்புரத்தில் நடைபெற்ற மாநில மாநாட்டில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சி வாய்ந்த விஷயம்தான்.”

``சின்ன வயதிலேயே நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைத்ததுண்டா?”

``இது மிகவும் எதிர்பாராமல் நடந்ததுதான். எங்கள் குடும்பத்தில் அப்பா அம்மாவிற்கும் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை. ஓட்டு போடுவது ஒன்று மட்டும்தான் அவர்கள் செய்திருக்கிறார்கள். நான் கல்லூரியில் படிக்கும் பொழுது எங்கள் கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவியை எந்த ஒரு காரணமும் இல்லாமல் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்கிறது. நம்முடன் படிக்கின்ற ஒரு பெண்ணை இப்படி அநியாயமாக சஸ்பெண்ட் செய்கிறார்களே என்ற முறையில் நான் அந்த பிரச்னையில் தலையிட்டேன். அப்போதுதான் நுழைந்தேன், அதன் பிறகு அடுத்தடுத்து எஸ்.எஃப்.ஐ மாவட்டச் செயலாளர், மாநிலச் செயலாளர், மாநிலத் தலைவர் இப்படியே அந்தப் பயணம் சென்று மலைவாழ் மக்கள் சங்கத்தின் உடைய தலைவராக பொறுப்பேற்கும்படி ஆகிவிட்டது. அரசியலில் நுழைய வேண்டும் என்ற திட்டமிட்ட ஏற்பாடு எதுவும் இல்லை. அப்படி இருக்க வேண்டுமென்றால் ஒரு அரசியல் பின்புறம் உள்ள குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும். நான் இருந்தது பெருவருநல்லூர் என்ற கிராமம். என்னுடைய அப்பா அம்மா விவசாய தொழில் ஈடுபட்டிருந்தனர். எங்கள் ஊர் வளமான ஊர். ஆனால் வளமான ஊரில் இருந்தாலும் ஏழ்மையில் இருப்பவர்களும் இருப்பார்கள் வசதியானவர்களும் இருப்பார்கள். எங்கள் ஊரில் ரெட்டியார்களிடம் தான் நில உடமை என்பது இருந்தது. மற்றவர்கள் அனைவரும் விவசாய தொழிலாளர்கள் தான். ஒரு விவசாய தொழிலாளி குடும்பத்திலிருந்து வந்திருப்பவன் நான். தங்கள் குடும்பத்தில் நான் ஒரு பையன் அக்கா இரண்டு பேர்.”

`உங்களுடைய குடும்பத்தை பற்றி சொல்லுங்கள்?’

``என்னுடைய துணைவியார் ஒரு அரசு பள்ளி ஆசிரியர். என்னுடைய துணைவியார் பெயர் செல்வகுமாரி. எனக்கு காதல் திருமணம், சாதி மறுப்பு திருமணம், மதம் மறுப்பு திருமணம் எல்லாம் தான். பசங்க இரண்டு பேர் இரண்டு பேருமே முனைவர் பட்டம் பெற்றவர்கள். ஒருவர் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இரண்டாவது மகன் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் வேளாண்மையில் முனைவர் பட்டம் பெற்றவர். இரண்டு பேருமே வேலையில் இருக்கிறார்கள். பசங்க ரெண்டு பேருமே காதல் திருமணம், கலப்பு திருமணம் எல்லாமே சீர்திருத்த அடிப்படையில் தான் நடந்த திருமணம் எங்கள் திருமணம் அப்படிதான் நடந்தது. அப்போது எங்களுடைய செலவு 50 ரூபாய் தான் மாலைக்கான செலவு மட்டும். வந்த எல்லோருக்கும் ஒரு டீ, மிக்சர் கொடுத்தோம். சென்னையில் உள்ள கேரள சாம்ராஜ் -ல் தான் எங்கள் திருமணம் நடந்தது. இதுதான் எங்களுடைய ஏற்பாடு. அரங்கம் நிறைந்த கூட்டம். அதே மாதிரி பசங்க இரண்டு பேருக்கும் மாலை மாற்றிக் கொள்வதை தவிர வேற எந்தவித சடங்கு சம்பிரதாயமும் இல்லாமல் தலைவர்கள் தலைமையில் தான் திருமணம் நடந்தது.”

``மாநில செயலாளராக வந்த பிறகு வீட்டில் பசங்க என்ன சொன்னார்கள்?”

``ரொம்ப மகிழ்ச்சி அவங்களுக்கு. 40 வருடமாக காடு மேடு கிராமமுன்னு பசங்கள கூட்டிட்டு இரவு பகலா அலைஞ்சு இன்னைக்கு ஒரு கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் உரிய பொறுப்பு என்பது வந்திருக்கிறது என்ற முறையில் குடும்பத்தில் எல்லாருக்குமே ரொம்ப மகிழ்ச்சி. உறவினர்கள் மட்டுமல்ல, கட்சி தோழர்கள் எல்லாருக்குமே 40 வருடமாக என்னுடைய பயணத்தை தமிழ்நாடு முழுவதும் நேரடியா நெருக்கமாக கவனித்துக்கொண்டு இருக்காங்க அவங்க எல்லாருக்குமே ரொம்ப சந்தோசமாக இருந்திருக்கிறது. பொருத்தமான தேர்வு அப்படின்றது அவங்க சொல்றாங்க.

கட்சி அணிகள் மற்றும் தோழர்கள் மத்தியில் ஒரு பொருத்தமான தேர்வு சரியான நேரத்தில இதை செய்திருக்கிறார்கள் நம்முடைய கட்சி அடுத்த கட்டத்துக்கு இவரால் கொண்டு செல்ல முடியும் என்ற ஒரு நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்து முடிந்த அளவுக்கு என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்வேன். போராட்டங்கள் அதிகரிக்கும் எங்களுடைய கட்சிகளை விரிவு படுத்துவதற்கான எல்லா தீவிரமான முயற்சிகளும் நாங்கள் மேற்கொள்வோம். தேர்தல் என்பது இடையில் வரும் போகும். தேர்தல் அரசியலை மட்டும் வைத்துக்கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியை மதிப்பீடு என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.”

``வீட்டில் ஒரே மகன் என்ற முறையில் அரசியலுக்கு செல்கிறேன், போராட்டம் செய்யப் போகிறேன் எனும் பொழுது வீட்டில் எப்படி ஏற்றுக் கொண்டார்கள்?”

``அவ்வளவு சுலபமாக அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. போயும் போயும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு போகிறானே அங்க போய் சம்பாதிக்க முடியாது. வெட்டியாக போய்விடும் என்று என் தந்தை யோசித்தார். ஒரு கட்டத்தில் அவர் தெரிந்து கொண்டார் கல்லூரியில் போராட்டம் நடத்துவது, ஒருமுறை தேர்தல் வேலைக்காக சென்று இருந்த போது கடிதம் வந்து ஆளே காணாமல் போய்விட்டார் என்று சொன்னது என்று நான் கம்யூனிஸ்ட் கட்சியில் வேலை செய்கிறேன், போராட்டம் செய்கிறேன் என்று அவர்களுக்கு தெரியும்.

வீட்டிற்கு ஒரே பையன், விவசாய தொழிலாளி குடும்பம், கிராமத்திலேயே இரண்டாவது பட்டதாரி நான்தான் அப்படி இருக்கும்போது குடும்பத்தில் இயல்பாக ‘எப்படியாவது வேலைக்கு போய் நம் பிள்ளை நம் குடும்பத்தை உயர்த்துவான் நாம் நிம்மதியாக இருக்கலாம்’ என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். எல்லா பெற்றோர்களைப் போலவே, என்னுடைய பெற்றோர்களுக்கும் அந்த எதிர்பார்ப்பு இருந்தது. வேலைக்கு சென்று கொண்டே கட்சியும் பார்க்கக் கூடாதா என்ற ஒரு எதிர்பார்ப்பு அவர்களிடம் இருந்தது. வீட்டிற்கு நான் ஒரு செல்லப்பிள்ளை, அதனால் அவர்கள் கடுமையாக என்னை எதுவும் கேட்கவில்லை.

திமுக, அதிமுகவில் அரசியலில் இருக்கிறவங்க எல்லாம் தொழில் செய்து கொண்டே அரசியலையும் ஒரு தொழிலாக செய்து கொண்டிருப்பார்கள். கம்யூனிஸ்டு கட்சி அப்படி கிடையாது முழு நேர ஊழியர் என்றால் முழுக்க முழுக்க அதைத்தான் செய்ய முடியும். சொல்லப்போனால் முழு நேர ஊழியரிலிருந்து விடுவித்தால் வேற வேலையே எங்களுக்கு தெரியாது. நான் 40 வருடமாக இதில் பயணிக்கிறேன், திடீரென்று வெளியே வந்து விட்டால் வேறு என்ன செய்வது என்று எனக்கு தெரியாது. எனக்கு தெரிஞ்சதெல்லாம் இதுதான்.”

``எதிர்பாராமல் அரசியலில் வந்து விட்டீர்கள், கொஞ்சம் காலம் வந்த பிறகு தெரியாமல் இதற்குள்ளே வந்து விட்டோம் என்று நினைத்து உள்ளீர்களா?”

``நிச்சயமாக இல்லை. ரொம்ப சரியான பாதையை தேர்ந்தெடுத்து இருக்கிறேன். மக்கள் முகங்களில் ஏற்படுகின்ற அந்த மலர்ச்சி, பாதிக்கப்பட்டவனுக்கு ஒரு தீர்வை ஏற்படுத்தி தருவது, மக்கள் நம்மை கொண்டாடுவது இதையெல்லாம் பார்க்கும் பொழுது, ஒரு கணம் கூட திரும்பிப் போக வேண்டும் என்று நினைத்ததில்லை. மிகுந்த மன மகிழ்ச்சியோடும், இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்கிற முறையில் தான் ஒவ்வொரு நிகழ்வும் என்னை ஊக்கப்படுத்தி இருக்கிறது. ஐயோ தவறு செய்து விட்டோம், தவறான முடிவெடுத்து விட்டோம் என்று ஒரு கணம் கூட நான் நினைத்ததில்லை.”

``நீங்கள் பொறுப்பேற்று இருக்கின்ற நேரம், மிகவும் முக்கியமான நேரம், கட்சி அணுகுமுறையில் ஏதாவது மாற்றம் இருக்குமா?”

``கட்சியில் ஏற்கனவே அடிப்படை ஸ்தாபன கட்டமைப்பு என்பது இருக்கிறது. கிராம கிளையில் இருந்து துவங்கி அகில இந்திய அளவு வரைக்கும் ஒரு அடிப்படை கட்டமைப்பு ஸ்தாபனம் என்பது இருக்கிறது. அதில் நாங்கள் முக்கியமாக இப்போது நாங்கள் பார்ப்பது ஒரு தேக்க நிலையில் கட்சி இருக்கிறது. ஒரு வளர்ச்சியை நோக்கி கொண்டு போக வேண்டிய மிக முக்கியமான காலகட்டம். அந்த முறையில் என்னுடைய தீவிரமான முயற்சிகள் என்பது இருக்கும். அதற்கு களப்போராட்டங்களை தீவிர படுத்த வேண்டும். 75 ஆண்டுகள் ஆன பிறகும் மக்களுடைய பல அடிப்படை பிரச்சனைகள் என்பது தீர்வு காணப்படாமல் தான் இருக்கிறது. உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் 1949 இல் இலவச மனை பட்டா வழங்குவது என்பது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்போது 75 வருடங்கள் ஆகி உள்ளது இன்னமும் மனைபட்டா பிரச்சனை என்பது தீரவில்லை. ஆனால் ஆடுதோறும் அரசாங்கம் மனைபட்டா கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் யாருக்கு கொடுக்கிறார்கள் என்று தான் தெரியவில்லை. ஆவணத்தில் பார்த்தால் பட்டா கொடுத்ததாக இருக்கிறது அங்கே போய் பார்த்தால் பட்டாவே இல்லை என்று போராட்டம் நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு குடும்பமும், அதற்கென்று ஒரு சொந்த இடம் ஒன்று வேண்டும், ஒரு வீடு என்று ஒன்று வேண்டும், கௌரவமாக நாகரீகமாக ஒரு குடும்பம் நடத்த வேண்டும். அதற்கான ஒரு உத்தரவாதமே இல்லை. 75 வருடங்கள் ஆனது, 1949 இல் இருந்து கொடுத்து வருகிறார்கள். இந்த மாதிரியான பல அடிப்படை பிரச்சனைகள் என்பது தீர்க்கப்படாமல் தான் இருக்கிறது. எனவே அந்தப் பிரச்சினைகள் மீதான களப்போராட்டங்களை அதிகப்படுத்துவது, எங்களுக்கு ஆதரவான தளத்தை விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடலாம் என்று இருக்கின்றோம்.”

நீண்டகாலமாக சிபிஐ சிபிஎம் இணைய வேண்டுமென பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான காலகட்டம் வந்துவிட்டது என நினைக்கிறீர்களா?

``இடதுசாரிகளுக்கு உள்ளே ஒரு கூட்டு நடவடிக்கை என்பது மாநில அளவிலேயும் அகில இந்திய அளவிலேயும் அதிகரித்திருக்கிறது. விழுப்புரம் மாநாட்டில் இடதுசாரிகளுக்கு உள்ளே ஒரு அணியை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். தேர்தல் அரிசியோடு நீங்கள் அதை இணைத்து பார்க்காதீர்கள். இடதுசாரி கருத்தியலை வலுப்படுத்தக்கூடிய வகையிலையும், இடதுசாரிகள் மக்களுடைய பல்வேறு பிரச்சனைகள் மீது கூட்டாக செயல்படுவதற்கான இடதுசாரிக் கொள்கையில் மாற்றாக முன்வைத்து செயல்படுவதற்கான முறையில் ஒரு இடதுசாரி ஜனநாயக அணியை உருவாக்குவது என்று நாங்கள் முடிவு எடுத்துள்ளோம். 24 வது அகில இந்திய மாநாடு வருகிற ஏப்ரல் 2-ஆம் தேதியிலிருந்து ஆறாம் தேதி வரைக்கும் மதுரையில் நடைபெற இருக்கிறது. எனவே அடுத்த இரண்டு மாதங்கள் என்பது முதன்மையான பணியாக அந்த பணி எங்களுக்கு இருக்கிறது. அது முடிந்த பிறகு இந்த இடது சார ஜனநாயக அணியை உருவாக்குவதற்கான ஒரு தீவிரமான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம். இதனுடைய ஆரம்ப கட்டமாக, சிபிஐ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோட தோழர் முத்தரசன் அவர்களிடம் தெரிவித்திருக்கிறோம். இந்தப் மாநாட்டுப் பணிகள் முடிந்த பிறகு அது தீவிரமடையும். இடதுசாரிகளை பலப்படுவதற்கான நல்ல ஒரு முயற்சியாக அது இருக்கும் என்று நான் நம்புகிறேன்.”

``தேசிய அளவில் இடதுசாரிகள் உடைய குரல் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கொண்டே தான் வருகிறது. எங்கே மிஸ் ஆனது என்று நினைக்கிறீர்கள்?”

``நீங்கள் அதைத் தேர்தல் அரசியலில் இருந்து சொல்கிறீர்கள். சட்டமன்றத்தில் நாடாளுமன்றத்தில் எங்களுடைய எண்ணிக்கை குறைந்துவிட்டது கருத்தில் கொண்டு எங்களுடைய குரல் சரிந்து விட்டதாக சொல்கிறீர்கள். தேசிய அளவிலும் தமிழ்நாட்டிலும் எங்களை விட வலுவாக குரல் கொடுக்கிற கட்சி சொல்லுங்கள். மக்கள் பாதிக்கப்படுகின்ற பிரச்னைகள் மீது எங்களை விட வலுவாக குரல் எழுப்பக்கூடிய வேறு ஒரு சக்தியை சொல்லுங்கள். சட்டமன்ற நாடாளுமன்றத்தில் எங்கள் பலம் அதிகரிக்க வேண்டும் என்பதில் நீங்கள் சொல்வதில் 100% உடன்படுகிறேன். 2006 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி 1 அரசாங்கம் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் பிரதமர் மந்திரியாக பதவி ஏற்ற அந்த அரசாங்கத்தில் இடதுசாரிகள் 63 பேர் வெளியில் இருந்து ஆதரித்ததனால் பல புதிய சட்டங்கள் மக்களுக்கு சாதகமான சட்டங்கள் உருவாக்கப்பட்டது. நிச்சயமாக அந்த பலத்தினால் 100 நாள் வேலை திட்டம், வன உரிமைச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், அனைவருக்கும் கல்வி கட்டாயம் என்ற சட்டம் இது அனைத்தும் அந்த காலகட்டத்தில் வந்ததுதான். குறைந்தபட்ச செயல்திட்டம் என்று உருவாக்கி அதை நீங்கள் செய்யுங்கள் என்று ஒரு அழுத்தம் கொடுத்தோம் அதுவும் நடந்திருக்கிறது.

அதனால் அந்தப் பதவியும் எங்களுக்கு தேவை. ஆனால் அதை மட்டுமே வைத்துக்கொண்டு நாங்கள் குறைந்து போய் விட்டோம், சரிந்து போய் விட்டோம் என்ற முடிவுக்கு வர முடியாது. எங்களுடைய கட்சி எங்கேயும் கரைந்து போகவில்லை எங்களுடைய கட்சி அமைப்புகள் அப்படியேதான் இருக்கிறது. வெகுஜன செல்வாக்கு என்பது குறைந்திருக்கிறது எனவே அதனை அதிகப்படுத்த வேண்டிய அவசியம் இப்போது இருக்கிறது. தேர்தல் அரசியல் என்பது கார்ப்பரேட் மயமாகிவிட்டது. பல கட்சிகளுக்கு பிரசாரம் எப்படி செய்ய வேண்டும் என்பது கார்ப்பரேட் தான் வழிமுறை சொல்கிறார்கள். அரசியலே கார்ப்பரேட் மயமாகிவிட்டது. வெளிநாட்டில் இருந்து வந்து தேர்தல் எப்படி நடத்த வேண்டும் என்று வழிநடத்துகிறார்கள். 50 வருடங்களாக தேர்தல் நடத்துகின்ற கட்சிக்கு வெளிநாட்டில் இருந்து கைடு செய்கிறார்கள். அதற்காக பல நூறு கோடி ரூபாய்கள் வாரி இரைப்பது போன்ற அளவுக்கு தேர்தல் என்பது மாறிவிட்டது. இது எல்லாமே கம்யூனிஸ்டிகளுக்கு அன்னியப் பட்ட ஒரு விஷயம். எனவே இதுக்குள்ளே தான் நாங்கள் எங்கள் பயணத்தை மேற்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.”

``திமுகவை ஆதரிக்கவில்லை என்றால் பிஜேபி வந்துவிடும் என்ற சமரசம் செய்கிற போக்கு இருக்கிறதா?”

``குறைகள் இருக்கிறது உண்மைதான். உதாரணத்திற்கு சாம்சங் தொழிலாளர்களுடைய அந்த யூனியனை பதிவு செய்வதற்கான குறைந்தபட்சம் சட்டப்படி செய்ய வேண்டிய வேலை. ஏழு பேர் சேர்ந்து நாங்கள் ஒரு யூனியன் ஆரம்பித்து லெட்டர் கொடுத்தால் அதை பதிவு செய்ய வேண்டும் என்பது ஒரு சட்டம். அந்த குறைந்தபட்ச வேலையை கூட செய்யாத பொழுது எங்களுடைய கடுமையான எதிர்ப்பை நாங்கள் தெரிவிக்காமல் இருக்க முடியுமா. அது முழுக்க முழுக்க தொழிலாளர் விரோதப் போக்கு என்று சொல்கிறேன். திமுக அரசாங்கத்தினுடைய தொழிலாளர் விரோதபோக்குதான் அது. இந்த மாதிரியான பல முரண்பாடான விஷயங்கள் அவர்களுக்கும் எங்களுக்கும் இருப்பது உண்மைதான். நாங்கள் தொழிலாளர் வருக கட்சி என்கிற முறையில உழைப்பாளி மக்களுக்கு உடைய நல்லனை பாதுகாப்பது தான் எங்களுடைய பிரதான கொள்கை. எனவே தொழிலாளுடைய நலன் சார் தான் எங்கள் கோரிக்கைகள் நாங்கள் வைப்போம். அவர்கள் முதலாளித்துவ கட்சி என்கிற முறையில் அவர்களுக்கென்று ஒரு தனிக் கொள்கை இருக்கிறது அதை வந்து அவர்கள் செய்கிறார்கள். இந்தக் கொள்கை முரண்பாடு என்பது இருக்கிறது. அதே நேரத்தில் பாசிசத் தன்மை கொண்ட ஒரு பாசிச போக்கு கொண்ட பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. மக்கள் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கக்கூடிய ஒரு கொள்கையை அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள்.

பல்கலைக்கழக மானிய குழு ஒரு புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது, துணைவேந்தர்களை நியமிப்பதற்கு, துணைவேந்தர் யார் என்று தேடுதலுக்கான ஒரு கமிட்டி தயார்படுத்துவதில் மாநில அரசாங்கத்திற்கு எந்த ரோலுமே இல்லை. கவர்னர், பல்கலைக்கழக மானிய குழு, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து சொல்கிறவர்கள் இவர்கள் மூன்று பேர் சேர்ந்து ஒரு ஆளை தேர்ந்தெடுப்பார்கள். மாநில அரசாங்கம் செலவு செய்ய வேண்டும், வேடிக்கை பார்க்க வேண்டும் எதுக்குமே மாநில அரசாங்கத்திற்கு ரோல் கிடையாது. இது என்ன ஒரு அக்கரமம். தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசாங்கம் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால் இங்கு கொடுக்கக்கூடிய பட்டங்களை செல்லாது என்று சொல்லக்கூடிய ஒரு அராஜகம் போக்குதான் நடைபெறுகிறது. மாநிலத்தினுடைய அதிகாரத்தை பறிக்கக் கூடிய வகையில் மத்தியில் இருக்கக்கூடிய அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனை எதிர்ப்பதற்கு திமுகவோடு நாங்கள் இணைந்து நின்று போராடுவோம். அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களுடைய நலன்களை பாதிக்கக்கூடிய வகையில் திமுக அரசாங்கம் செயல்பட்டால் அதை நாங்கள் எதிர்த்து போராடுவோம்.”

Meta : 'கவனக்குறைவால் ஏற்பட்ட தவறு' - மார்க் கருத்துக்கு இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட மெட்டா

இந்தியாவின் பொது தேர்தல் வெற்றி குறித்து தவறான கருத்து தெரிவித்த மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் சார்பாக மெட்டா நிறுவனம் தற்பொழுது மன்னிப்பு கோரி உள்ளது. கடந்த ஜனவரி 10ஆம் தேதி பாட்காஸ்ட் (Podcas... மேலும் பார்க்க

'ரூ.100.92 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கிய ED' - அதிர்ச்சியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தற்போது ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறார். இவர் ஓ.பன்னீர்செல்வம் அணியான அ.தி.மு.க உரிமை மீட்புக் குழுவில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி வகிக்கிறார். இந்த ... மேலும் பார்க்க

`அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய கிராமம் குறி வைக்கப்படுகிறது!’ - கொதிக்கும் அண்ணாமலை, அன்புமணி

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 51 செ.மீ அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. அதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் பெருக்கடுத்த வெள்ளம், அதன் கிளை ஆறுகளான மலட்டாறு மற்றும் ப... மேலும் பார்க்க

கண்காணிக்கும் விசாரணை அமைப்புகள்... ஈரோட்டில் ரூட் போடும் அண்ணாமலை!

ஈரோடு கிழக்கு - இடைத்தேர்தல்ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க எனப் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. நாம் தமிழர் கட்சி மட்டுமே தி.மு.க-வை எத... மேலும் பார்க்க

`தேசிய அளவிலான தேர்தலில் மட்டுமே `இந்தியா’ கூட்டணி’ - கைவிரித்த சரத் பவார்

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் நடக்க இருக்கும் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தனித்த... மேலும் பார்க்க

`இவங்க பொற்கால ஆட்சியில், நாங்க குடைச்சல் கொடுக்கறோம்னு..!’ - சிபிஎம் பெ.சண்முகம் விரிவான பேட்டி

விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில், புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வாகியிருக்கிறார் பெ.சண்முகம். அவரை நேரில் சந்தித்து வாழ்த்தியதோடு, நடப்பு அரசியல் குற... மேலும் பார்க்க