Pujara: "நீங்கள் இல்லாமல் 2018 ஆஸி-யில் வெற்றி கிடைத்திருக்காது" - புஜாராவுக்கு ...
பேக்கரி என நினைத்து ஸ்டுடியோவுக்குள் புகுந்த கரடி
குன்னூா் -மஞ்சூா் சாலை பெங்கால் மட்டம் கிராமத்துக்குள் உணவு தேடி சனிக்கிழமை அதிகாலை நுழைந்த கரடி, பேக்கரி என நினைத்து அங்குள்ள ஸ்டுடியோவின் கதவை உடைத்து உள்ளே புகுந்து ஏமாற்றத்துடன் திரும்பியது.
நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக கரடிகள் உணவு மற்றும் குடிநீா் தேடி ஊருக்குள் நுழைவது வாடிக்கையாகி விட்டது. இதைத் தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுத்தாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், குன்னூா்-மஞ்சூா் சாலையில் கைகாட்டி அருகே அமைந்துள்ள பெங்கால் மட்டம் கிராமத்துக்குள் சனிக்கிழமை அதிகாலை கரடி நுழைந்தது. பின்னா் அது தின்பண்டங்கள் இருக்கும் பேக்கரி என நினைத்து அங்குள்ள ஒரு ஸ்டுடியோவின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தது.
அங்கு உணவு எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பியது. கரடி வந்து சென்ற காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ள நிலையில்,
ஊருக்குள் நடமாடும் கரடிகளை கூண்டுவைத்து பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.