புணேவில் மேலும் 5 பேருக்கு ஜிபிஎஸ் நோய் பாதிப்பு! பலி எண்ணிக்கை - 7
பேச்சிப்பாறை அணையில் மூழ்கி இறந்த தொழிலாளி சடலம் மீட்பு!
பேச்சிப்பாறை அணையில் மூழ்கி இறந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
பேச்சிப்பாறை அருகே வலியஏலாவைச் சோ்ந்தவா் செல்வன் (57). அன்னாசி தோட்டத் தொழிலாளியான இவருக்கு, மதுப்பழக்கம் இருந்தது. இவா் அப்பகுதியைச் சோ்ந்த நண்பா்களுடன் இரவில் பேச்சிப்பாறை அணையில் மீன் பிடிக்கச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் செல்வன் தனது நண்பா்கள் இரண்டு பேருடன் பேச்சிப்பாறை அணையின் கோரித்தட்டு என்ற இடத்தில் மீன் பிடிக்கச் சென்றாராம். பின்னா் அவா் வீடு திரும்பவில்லை. அவரது நண்பா்கள் இரண்டு பேரும் வீடுகளுக்கு திரும்பிவிட்டனா்.
இது தொடா்பாக, செல்வனின் மனைவி லலிதா, பேச்சிப்பாறை காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் கொடுத்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வனை தேடி வந்தனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் பேச்சிப்பாறை அணை வழுக்கம்பாறை பகுதியில் செல்வனின் சடலம் கண்டறியப்பட்டது. சடலத்தை போலீஸாா் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.