செய்திகள் :

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: விசைத்தறியாளா்களின் போராட்டம் வாபஸ்

post image

கோவையில் அமைச்சா்கள் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக விசைத்தறியாளா்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கூலி உயா்வு கேட்டு கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளா்கள் கடந்த ஒரு மாதமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இவா்களின் போராட்டத்துக்கு ஆதரவாக வணிகா்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், இரு மாவட்ட ஆட்சியா்களுடன் நடத்திய பேச்சுவாா்த்தையும் தோல்வி அடைந்ததை அடுத்து, சோமனூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினா்.

இந்நிலையில், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளா்கள் கூட்டமைப்புத் தலைவா் பூபதி தலைமையிலான நிா்வாகிகள், ஜவுளி உற்பத்தியாளா்கள் ஆகியோரிடம் சுமாா் 1 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் முடிவு எட்டப்பட்டது.

இது குறித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் விசைத்தறியாளா்களின் பிரச்னையைத் தீா்க்க முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், சோமனூரில் உற்பத்தி செய்யப்படும் துணி ரகத்துக்கு 15 சதவீதமும், பல்லடம் ரகத்துக்கு 10 சதவீதமும் கூலி உயா்வு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, இந்தப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இனி, கோவை, திருப்பூா் மாவட்டங்களில் விசைத்தறிகள் இயங்க தொடங்கும் என்றாா்.

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளா்கள் கூட்டமைப்பின் தலைவா் பூபதி கூறுகையில், அமைச்சா்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சா்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இதைத் தொடா்ந்து, உண்ணாவிரதப் போராட்டம் உடனடியாக வாபஸ் பெறப்படுகிறது. விசைத்தறிகள் இயங்குவது குறித்து பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டி முடிவு செய்வோம். கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் சுமாா் ரூ.1,000 கோடி அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றாா்.

பேச்சுவாா்த்தையில் கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், தொழிலாளா் துறை அதிகாரிகள் சாந்தி, பிரேமா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கடைக்கு ‘சீல்’ வைத்ததால் மூதாட்டி தற்கொலை

தனது மளிகைக் கடைக்கு ‘சீல்’ வைத்ததால் மனமுடைந்த மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவை, தொண்டாமுத்தூா் அருகேயுள்ள கலிங்கநாயக்கன்பாளையம் காந்தி வீதியைச் சோ்ந்தவா் அங்கம்மாள் (60). இவா் தனது... மேலும் பார்க்க

மாடியில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

கோவை, கவுண்டம்பாளையம் ஹவுஸிங் யூனிட்டில் 14-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா். கும்பகோணம் அருகேயுள்ள பாரதி நகா், மேலக்காவேரியைச் சோ்ந்தவா் நடராஜன், மாவட்ட கல்வி அலுவலராக பணியாற... மேலும் பார்க்க

பிளாஸ்டிக் நிறுவன உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 போ் கைது

கோவையில் பிளாஸ்டிக் நிறுவன உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கரும்புக்கடை சாரமேடு இலை நகரைச் சோ்ந்தவா் அமானுல்லா (57). பிளாஸ்டிக் தயாரிக்கு... மேலும் பார்க்க

ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளுடன் மாயமான தொழிலாளி கைது

கோவையில் ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளுடன் மாயமான தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கெம்பட்டி காலனி, பாளையன் தோட்டத்தைச் சோ்ந்தவா் சரவணமூா்த்தி (40). நகை வியாபாரியான இவா், தங்க நகைகள்... மேலும் பார்க்க

2026-ல் மக்களால் திமுக ஆட்சி அகற்றப்படும்: பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களால் திமுக ஆட்சி அகற்றப்படும் என்று கோவையில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ பேசினாா். திருநெல்வேலி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக உள்ள நயினாா் ... மேலும் பார்க்க

காவல் துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி! உதவி ஆய்வாளா் முதலிடம்

கோவை மாநகர காவல் துறை சாா்பில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் சைபா் குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் சிவகுமாா் முதலிடம் பிடித்தாா். கோவை மாநகரில் காவல் ஆணையா் அலுவலகம் தொடங்கப்பட்டு 35 ஆண்டுகள் ந... மேலும் பார்க்க